Friday, 11 April 2014

கரிசல் மண்காவியம்22

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.22
அத்தியாயம்.22

கமலா பள்ளி முடிந்து வந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.வீட்டு வாசலில் இதுவரை வீட்டுப்பக்கம் வந்து போகாத அன்னியச்செருப்புகள் அணிவகுதுக்கிடக்கின்றன.காலணிகள் கம்பீரமாகக் காட்சியளிப்பதைப் பார்த்தால் பட்டணத்தில் இருந்து வந்ததுபோல் நவநாகரிகமாகத் தோன்றின.வசதி படைத்தவர்கள்தான் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதையும் பாதாகைகள் காட்டிய முகவரிகளில் அவள் புரிந்துகொண்டு மெதுவாக வியப்போடு தயங்கித் தயங்கி வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறாள் கமலா.

வீட்டுக்குள் கூடம்(வரவேற்பறை) கலகலப்பாக இருக்கின்றது.ஆச்சியின் பேச்சு அத்தனை பேச்சுக்களையும் மீறி அமர்க்களமாய் ஒலிக்கிறது.அனைவரின் கேள்விகளுக்கும் ஆச்சிதான் பதில் அளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது கமலாவின் வருகை அத்தனை பேர்களின் பார்வைகளையும் அவள்பக்கமாக ஈர்க்கிறது.”வந்துவிட்டாள் வந்துவிட்டாள்” என்று அவளையே எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் கண்களும் அவள் மேல் படுகின்றன.கடலலை ஓய்ந்த நிசப்தம் நிலவுகிறது.

வீட்டின் உள்ளறைக்குள் நுழைகிறாள் கமலா.கமலாவின் தாயார் வேகமாக எழுந்து கமலாவிடம் வருகிறாள்.”இவங்கெல்லாம் யாரும்மா?”எனக் கேட்கிறாள் கமலா.
“நீ முதல்ல ஒரு நல்ல சேலை எடுத்துக் கட்டு.அவங்க உன்னையத்தான் பாக்க வந்திருக்காங்க”
“என்னையவா?......எதுக்கு?
“அடியே அவங்க உன்னையப் பொண்ணு பாக்க வந்திருக்காங்க.வா வா சீக்கிரமா ஒரு நல்ல சேலையக் கட்டிக்கிட்டு தலவாரிப் பூ வச்சுக்கிட்டு வா”என அவசரப் படுத்துகிறாள் தாய்.
என்னம்மா இதெல்லாம்.?யார்ட்டக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க.?நான்தான் படிக்கணும்ன்னு சொல்ரேன்ல்ல.அப்புறம் ஏங் இப்படியெல்லாம் பண்றீங்க?எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு நாங் உங்ககிட்ட கேட்டேனா?எனக்கு இப்போக் கல்யாணமெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.முதல்ல அவங்கள மரியாதையாப் போகச்சொல்லு.”எனத் தாயிடம் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கிறாள்.அப்போது கமலாவின் அப்பாவும் அங்கு வருகிறார்.

“என்னம்மா இங்க பேச்சு.சீக்கிரம் ரெடியாயிட்டு வாம்மா.அவங்க உனக்காகத்தான இவ்வளவு நேரமாக் காத்துக்கிட்டு இருக்காங்க.மணி ஆகுது.அஞ்சர மணிப்பஸ்ஸுக்கு அவங்க போகனும்ல்ல.அந்த வண்டியவிட்டா அப்புறம் அவங்க எப்படிப் போவாங்க.அதுதான நம்ம ஊர்ல கடைசி பஸ்ஸு”என அவசரப்படுகிறார் அவளுடைய அப்பா.
“அப்பா.ஆச்சிக்கும் அம்மாவுக்குந்தான் அறிவு இல்லையின்னா.நீக்களுமாப்பா?நான் படிக்கிறேன்னுதான் உங்களுக்குத் தெரியும்மில்ல.அது ஏம்ப்பா உங்களுக்கும் புரியல.”
‘அதெல்லாம் சரிதாம்மா.ஏதோ அவங்க வந்துட்டாங்க.வந்ததுக்கு மரியாதை கொடுக்கணும்ல்ல.மத்தத எல்லாம் நாம அப்பறமாப் பேசிக்கலாம்.இப்ப ஒரு மரியாதைக்காக சும்மாதான்.கல்யாணம் பேசி முடிச்சிறப் போறமா என்ன?அதெல்லாம் உன்னோட சம்மதம் இல்லாம அப்பா எதுவுமே பண்ணமாட்டேன்.சொன்னாப் புரிஞ்சுக்கோம்மா!”எனத் தந்தை சமாதானம் செய்தார்.

“எல்லாரும் அங்க என்ன பண்ணுறீங்க.நேரமாவுதுல்ல.சீக்கிரம் அவள வரச்சொல்லுங்க.”என ஆச்சி அவசர மணி அடித்தாள்.
“எல்லாம் இந்தக் கெழவி செய்யுற வேல அவங்கெல்லாம் போகட்டும் அவள என்ன பண்ணுறேன்னு பாரு”என ஆச்சியைத் திட்டிக்கொண்டே ஏதோ ஒரு சேலைய எடுத்து சுற்றிக்கொண்டாள் கமலா.பூச்சரத்தை எடுத்து கமலாவுக்குச்சூட்டினாள் கமாலாவின் தாயார்.
“சரி வா”என கமலாவை அழைத்துக்கொண்டு வந்தாள் தாயார்.கமலா வந்து அமர்ந்தாள்.வந்தவர்களின் பார்வை முழுவதும் கமலாவின் மீது படர்ந்தது.வந்தவர்களில் ஒருவர் “இதோ பாரம்மா இவர்தான் மாப்பிள்ளை.இவர் பி.ஏ.படிச்சுட்டு தாலுகா ஆபிசுல குமாஸ்தா வேல பாக்குறாரு.கூடிய சீக்கிரம் தாசில்தார் ஆயிருவாரு”என மாப்பிள்ளையை அறிமுகம் செய்து வைத்தார்.

கமலாவும் பார்பதுபோல் பார்த்து.தலையைக்குனிந்து கொண்டாள்.கமலாவின் சங்கடத்தைப் புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.”சரிம்மா கமலா நீ உள்ளே போ”என கமலாவிற்கு விடையளித்தார்.
“நல்லதாப்போச்சுடா சாமிகளா”என எழுந்து உள்ளே போய் தன் பொய்யான பொண்ணு வேடத்தைக் களைந்து எறிந்தாள் கமலா.

“சரிங்க நாங்கள் வருகிறோம்.மத்தத அப்புறமா பேசிக்கலாம்.உங்க ஊர்ல இந்த வண்டிய விட்டா வேற வண்டி கிடையாது.நாங்க புறப்படுறோம்.”என வணக்கம் செய்து மாப்பிள்ளைவீட்டார் புறப்பட்டுப் போகிறார்கள்.அப்புறம்தான் ஆரம்பம் ஆகிறது.ஆச்சிக்கும் கமலாவுக்கும் மகாபாரத யுத்தம்.
“ஏய் கெழவி இதெல்லாம் உன்னோட வேலதானா.ஒனக்கு வேற வேலையே இல்லையா?பொழுது போகலின்னா காட்டுப்பக்கம் போயி களை எடுக்குறவங்கள மேய்க்க வேண்டியதுதான.ஏங் என் உசுர எடுக்குறய எதுக்கு?இன்னுமே இந்த மாதிரி ஏதாவது அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுனயின்னு வச்சுக்கோ அப்புறம் நாங் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”எனத் தன் அஸ்திரங்கள் ஒவ்வொன்றாக ஆச்சியின் மீது ஏவுகிறாள் கமலா.   .    

“என்னடி பண்ணுவ?நாங் உறங்கும்போது கத்திய எடுத்து எங்கழுத்த கரகரன்னு அறுத்துக் கொன்னுருவியா?”என சரிமல்லுக்கு சவால் விடுகிறாள் ஆச்சி
”அப்படிச்செஞ்சா அது கொலைக்கேஸ் ஆயிருமே......ஒரே அடியா மூச்சப்புடிச்சு அமுக்கிக் காலி பண்ணிடுவேன்.... அப்புறம் வாயுக்குத்துல வாயப்பொளந்திட்டான்னு ஊரக்கூட்டி ஒப்பாரிவச்சு சுவர்ல சாதிவச்சுப் பொணம் ஆக்கிருவேங்.”என தன் உள்ளக்குமறலைக் கொட்டினாள் கமலா.
“அடி கொலகாரச்சிரிக்கி நீ செஞ்சாலும் செய்வேடி.ஏண்டா அய்யாசாமி பாத்தியா ஓம் மகா எப்படியெல்லாம் பேசுறான்னு”எனத் தன் ஆதரவாக மகனை இழுக்கிறாள் ஆச்சி.
“ஏம்மா அவதான் சின்னப்பொண்ணு.நீ பெரிய மனுசிதான,....அவகூடப்போயி இப்படி சரிமல்லு கட்டுறயே......பேசாம இரும்மா...எது எது எப்போ எப்போ நடக்கணுமோ அது அது அப்ப அப்ப நடக்கும்.”என ஆச்சியை சமாதானம் செய்கிறார் மகன்.
“ஓகோ....உங்களுக்கு எல்லாம் நாங் பேசுரதுதாங் தப்பாத் தெரியுதோ?இப்பச்சொல்ரேங் எல்லாரும் கேட்டுக்கோங்க வருற ஆவணிக்குள்ள இந்தச்சிரிக்கியை எவங் கையலயாவது புடிச்சுக்கொடுத்து இந்த வீட்டவிட்டு விரட்டல நான் இந்த ஊருக் கிராம முன்சு சுந்தரம்பிள்ளை பொண்டாட்டி இல்ல....அடியே பாக்கலாண்டி ...நீயா ..நானான்னு ..ஒரு கை பாக்குரேண்டி”எனச்ச்பதம் செய்கிறாள் ஆச்சி.

“ஐயோ! ஏன்தான் இப்படி என்னக்கொல்றீங்க.நாங் படிக்கணும்.நாங் படிக்கணும்.என்னயப்படிக்க விடுங்க .....என்னயப்படிக்கவிடுங்க.....எனக்குக் கல்யாணம் வேண்டாம்....எனக்குக் கல்யாணம் வேண்டாம்.....எனக்கும் கனவுகள் இருக்கு.எனக்கும் கடமைகள் இருக்கு.எனக்கும் உரிமைகள் இருக்கு....எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு....எனக்கும் வாழ்வுன்னு ஒண்ணு இருக்கு.....எனக்கும் உணர்வுகள் இருக்கு......எனக்கும் லட்சியங்கள் இருக்கு.....எனக்குக் கல்யாணம் வேண்டாம்......எனக்குக் கல்யாணம் வேண்டாம்.....”என ஓலமிட்டு அலறித்துடித்து படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்து ஓவெனக் கதறி அழுதாள் கமலா.

அலறல் சத்தம் கேட்டுப் பதறித் துடித்து ஓடி வந்து கமலாவிடம்.அவளுடைய தாயும் தந்தையும் அவளை வாரி அனைத்துக் கொண்டு கவலையோடும் வியப்போடும் விசாரிக்கிறார்கள்.
“என்னம்மா கமலா ...என்னாச்சு.....ஏதாவது கனவு கண்டியா?சொல்லும்மா சொல்லு.”என அப்பாவும் அம்மாவும் பதட்டத்துடன் பரிவோடு கேட்கிறார்கள்.அப்போதுதான் கமலாவுக்குப்புரிகிறது.அவள் கண்டது கனவு என்று.கனவு நிசமாகிவிடுமோ எனும் அச்சத்தில் அவள் தன் தாயின் மடியில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.அவளின் பயத்தைப் புரிந்துகொண்ட தந்தை “இந்தா பாருமா கமலா நீ எங்களுக்கு ஒரே பொண்ணு.எங்களோட கனவே நீதாம்மா.நீ எம்புட்டுப் படிக்கணுமோ நீ அம்புட்டுப் படிம்மா.இனிமே இந்த வீட்ல நீ என்ன நெனக்கிறியோ அதுதாங் நடக்கும்.உன்ன மீறி எதுவும் நடக்காதும்மா.இனிமே நீ இப்படிக் கண்டத நெனச்சு மனசுல கவலப்படக்கூடாது தெரிஞ்சதா?பயிதியக்காரப் பொண்ணே ஏண்டா இந்த வீணான பயம்.நீ தாண்டா இந்த வீட்டு எசமானி.”என கமலாவிற்கு உறுதியான சொற்களால் அவளை மீண்டும் பழைய நினைவிற்கு மீட்டெடுத்து தன் மார்பில் அணைத்து அவளுடைய வழியும் விழிகளைத் துடைத்துத் தன் விழிகளையும் துடைத்துக்கொண்டார் உலகின் உணர்வுகளைப்பற்றிப் படித்தறிந்த அந்த அன்புத் தந்தை.

(தொடரும்.)

கொ.பெ.பி.அய்யா.`


     



Friday, 4 April 2014

கரிசல்மண் காவியம்21

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 21
அத்தியாயம்-21
ராஜாவின் தாயார் முதலாளி வீட்டு காட்டு வேலைக்கு விடிந்து போனவள்  பொழுது அடைந்து வீட்டுக்கு வந்து “அய்யோ” மகன் பசியோடு இருப்பானே என அவசர அவசரமாக சமையல் செய்வதற்கான வேலையை தொடங்குகிறாள்.பகலெல்லாம் பருத்தி மாரைப் பிடுங்கிப் பழுத்த உள்ளங்கைகளோடு கூலியாகப் பெற்ற கம்மம் புல்லை (நாட்டுக்கம்புத் தானியம்)உரலில் போட்டுக் குத்தித்தான் சோறாக்க வேண்டும்.அதுவும் இரண்டு முறை அந்தக்கால உரலில் இட்டு உலக்கையால் குத்தி இடிக்கவேண்டும்.முதலில் தானியத்தைக் குத்தி உமியை நீக்கவேண்டும்.அப்புறம் அதை நீர் விட்டு இடித்து மாவாக்கிச்சேர்க்க வேண்டும்.பின் அதை உலைக் காய்ச்சி கொதித்தபின் கொட்டிக் கிண்டிக் கிண்டி சோறாக்க வேண்டும்.சோறாக்கியும் பொறுமையாகக் காத்திருந்து அது திடமாக இறுகும்வரைப் பொறுத்திருந்து அடுப்பைவிட்டு இறக்கி அதற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு கறி அல்லது கொழம்பு தயார்செய்துதான் சாப்பிடவேண்டும்.அந்த உணவைத் தயாரிக்க குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது ஆகும்.அதுவரை பசியைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த நாளில் முதலாளி வீட்டுக்கு வேலைக்குப் போனால்தான் தானியம் கூலியாகக் கிடைக்கும்.அதுவும் ஒரு படித் தானியம்.ஒரு படி என்பது ஒன்றரை லிட்டர்.அவ்வளவுதான் கூலி.அதில்தான் அனைத்து செலவு வகைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.நெல்லரிசியை ஏழையாகப் பிறந்தவர்கள் கண்ணாலும் காண முடியாது.சில நேரங்களில் தானியமும் கிடைக்காத தட்டுப்பாடுகள் ஏற்படும்.அப்படிப்பட்ட சூழலில் ஆல்வள்ளிக் கிழங்கை அவித்தோ அல்லது மக்காச்சோள மாவைக் கிண்டியோதான் வயிறை அறையும் குறையுமாக நிரப்பிக்கொள்ளவேண்டும்.அப்படிப்பட்ட பஞ்சகாலம் அது.அந்தக் கஷ்ட காலத்திலும் ஒரு ஏழைத்தாய் தன் பிள்ளையை படிக்கவைத்தாள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை எண்ணிப்பார்க்கும்போதே அவளை கைகூப்பி வணங்கிடத் தோன்றுகிறது அல்லவா?
ஒருபக்கம் அடுப்பில் சோறு கொதித்துக்கொண்டு இருக்கிறது.மறுபக்கம் பிள்ளையின் பசியை எண்ணி தாயின் மனது கொதித்துக்கொண்டு தவிக்கிறது.பசியின் கொடுமையை மறக்க மகனைத் தன் அருகில் அழைத்து அன்பில் நிறைந்த தாயின் பாசத்தை ஆறுதலாக அள்ளி வழங்கிட ராஜாவை கூப்பிடுகிறாள்.ராஜா இங்க வாயா!இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ!இன்னும் கொஞ்ச நேரத்துல சோறு சாப்புடலாம்.என்னய்யா ரொம்பப் பசிக்குதா?இன்னிக்குக் கொஞ்சம் நேரம் அதிகமாயிரிச்சு.கொஞ்சம் பொறுத்துக்கோ!”எனக்கூறிய அந்த அன்புத்தாயின் ஆறுதல் மொழியிலேயே அவனுடைய பசியெல்லாம் அடங்கிப்போய்விட்டது.
“பகல் பொழுதெல்லாம் உழைத்துக் களைத்து வந்த உன் பசியை எண்ணாமல் என் பசிபற்றி வருந்தும் என் தெய்வமே!உன் பசியாற்றும் பாக்கியம் எனக்கு எப்போது கிட்டுமோ!அப்போதே நான் உன் மகனாவேன்.”என ராஜா தன் மனதுள் எண்ணிக் கண்களில் நீர் வழியப் பார்க்கிறான்.தாயும் மகனைப் பார்க்கிறாள்.”இன்னும் எத்தனை நாட்கள்தான் இத்தனை கஷ்டங்களோ!அந்த சாமி என்றைக்குத்தான் நம்மளக் கண் தொறந்து பாக்குமோ!,’என ஏங்கும் தாயின் ஏக்கத்தை தன் பிள்ளைக்குத் தெரியாமல் பொய்யான புன்னகையால் ஒளித்தாள்.
அப்போது பக்கத்து வீட்டில் பாட்டியின் புளிச்சேப்பம்.சத்தம் பலமாகக் கேட்கிறது.அந்த சத்தம் கேட்ட தாயும் மகனும் ஒருமுறை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு அப்புறம் திடீரென வாய்விட்டு சிரிக்கிறார்கள்.
“பாத்தியாம்மா கெழவிக்குக் கொழுப்ப.அவா சாப்புட்டுட்டாளாம்.அத நமக்கு சத்தம் போட்டுச்சொல்றாளாம்.”எனக்கூறிக்கொண்டே மீண்டும் தன் நிலை மறந்து கலகலவென சிரித்து தன் தாயின் கவலையை மறக்க வைக்கிறான்.தாயும் தன் துன்பம் மறந்து சிரித்துக்கொண்டே கமலாவைப்பற்றி விசாரிக்க முயல்கிறாள்.
“டேய் ராஜா நாங் ஒண்ணு கேள்விப்பட்டேனே நெசமா?”என ஆற்மபிக்கிறாள்.
“என்னம்மா அது “என ஒன்றும் அறியாதவன் போல் தாயைப்பார்கிறான்.அடுத்த வினாவிற்கு.
“எல்லாம் எனக்குத் தெரியுண்டா.இது என்ன தூத்துக்குடி டவுனா!ஒரு வீட்ல நடக்குறது அடுத்த வீட்ல தெரியாமப் போறதுக்கு.!பாவண்டா அந்தப்பொண்ணு.எப்படியோ ஒருவழியா அந்தப் புள்ள படிக்கப்போறதுக்கு அவங்க வீட்ல சம்மதிச்சதே பெரிய காரியந்தாங்.ஆனா இன்னிக்கு நடந்த சமாச்சாரம் ஆச்சிக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு வைய்யி அவ்வளவுதாங் இதச்சாக்க வச்சே ஒரு ஆட்டம் ஆடி பாவம் அந்தப்புள்ளைய படிக்கப் போகவிடாம நிறுத்திப்போடுவா,பொம்பளையாப் பொறக்குறத பெரிய பாவண்டா.அதுக எத்தன இடைஞ்சல்கள சமாளிக்க வேண்டியிருக்கு.என்னைக்குத்தான் இந்த உலகம் பொம்பளைங்கள நிம்மதியா வாழ விடுமோ தெரியல.பொறந்ததுல இருந்து சுடுகாடு போறவரைக்கும் பொம்பளைங்களுக்கு எத்தன தொல்லைக துயரங்க.அதுக படிச்சு முன்னேறனுமுனா என்ன பாடு பட வேண்டியிருக்கு!எவ்வளவு கஷ்டங்களத் தாண்ட வேண்டியிருக்கு. பாவண்டா பொண்ணுக.”என கமலாவின் நிலையை எண்ணி வருந்தினாள் அந்தத் தாய்.
தன் தாயும் ஒரு பெண்தானே!அவள் எத்தனை சுமைகளை,சோகங்களை.துன்பங்களை,துயரங்களை,இன்னல்களை,இடையூறுகளைத் தாங்கித் தாண்டித் தனக்காக தன் உயிரை ஏந்தி வாழ்ந்துகொண்டிருக்கிறாள் என்பதை எண்ணி தன் தாயின் அந்த வறண்டுபோன  வாடிய முகத்தைப் பார்க்கிறான் அந்த ஆசை மகன்.சோறு கொதித்துத் தணிகிறது.வெந்து முடிந்த சோற்றை உலை மூடியால் கவிழ்த்தி அடுப்பிலேயே இறுகட்டும் என இருவரும் காத்திருக்கிறார்கள்.

(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.



Friday, 28 March 2014

சிறுகதை ஆடுத்த ரவுண்ட்


அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது. உண்மையைத்தான் சொல்கிறேன்

ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்கு. உயர்வாகப்படிக்க வைத்தார் உத்யோகமும் கிடைக்கஉதவினார்..
மற்றெல்லாம் பெண்மக்கள்
ஆண் வாரிசே ஆளட்டும் என்றே அத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.

எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?

மகனும் கண்டு கொள்வத்தில்லை. பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.

இப்போதுதான் பாட்டி சொன்ன கதைஒன்று நினைவுக்கு
வருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப் போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான் ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவி யொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண் சட்டியை பத்திரமாக ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.

"இந்த அசிங்கம் பிடிச்ச சட்டியைத் தூரே எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்து
கிறாய்"என்று.அதற்கு அநதச் சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.

இன்று நீ எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும் வரும்.

கொ.பெ.பி.அய்யா.

அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது. உண்மையைத்தான் சொல்கிறேன்

ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்குன் உயர்வாகப்படிக்கவைத்தார்உத்யோகமும் கிடைக்க உதவினார்..மற்றெல்லாம் பெண்மக்கள்.ஆண் வாரிசே ஆளட்டும் என்றேஅத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.

எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?

மகனும் கண்டு கொள்வத்தில்லை பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.

இப்போதுதான் பாட்டி சொன்ன கதை ஒன்று நினைவுக்குவருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப் போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான் ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவியொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண் சட்டியை பத்திரமா ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.

"இந்த அசிங்கம் பிடிச்ச சட்டியைத் தூரே எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்துகிறாய்"என்று.அதற்கு அநதச் சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.

இன்று நீ எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும் வரும்.

கொ.பெ.பி.அய்யா.

பாவம் சலூன்கார் கதை


பாவம் அந்தத் தொழிலாளி.....

(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச்

சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.

அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]

பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்

ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா

பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து

வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.

"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........

இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு

வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்

போச்சுபாருங்க.தயவு செய்து தப்பா நினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்

வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்

இன்று வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்

செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று

கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்

எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!

கொ.பெ.பி.அய்யா.

 

கரிசல் காவியம் 20


கரிசல் மண்ணில் ஒரு காவியம் 2௦

 

அத்தியாயம் 2௦

 

கமலாவிற்காக இன்று பாடசாலையில் கோலாகல வரவேற்பும் கொண்டாட்டமும் பள்ளியில் நிறைந்து காணப்பட்டது.முதலாவது சுதந்திர விழாப்போல் வகுப்பறைகள் எல்லாம் பரபரப்பாக இருந்தன.அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமாக நிறைந்தன.இந்த நாள் அவளின் திருப்புமுனை நாளாக எண்ணி அவள் மனது மகிழ்ச்சியில் பொங்கிவழிந்தது.நல்ல பொழுதாய் விடிந்த இந்த நன்னாளை தனது வரலாற்றில் ஒரு பொன்னாளாய் பதித்துக்கொண்ட அவள் பள்ளி வேளை முடிந்து வீட்டுக்குத் திரும்பத் தயாராகி வாசலில் ராஜாவிற்காகக் காத்திருக்கிறாள்.

 

ராஜாவும் வருகிறான்.”என்ன நிக்கிற வீட்டுக்குப் போகல”எனக் கேட்கிறான்.அம்மா சொன்ன ஆலோசனைகள் அவன் நினைவுக்கு வருகின்றன,அன்னையின் அறிவுமொழிகள் சரிதான் என அவனுக்குத் தோன்றியதால் கமலாவுடன் செல்ல அவன் யோசிக்கிறான்.

 

“என்ன யோசனை ராஜா?”என அவன் வித்தியாசமான முகக்குறிகளைக் கவனித்துக் கேட்கிறாள்..சுதாரித்துக்கொண்ட ராஜா,”அதெல்லாம் ஒன்றுமில்லை”என சமாளிக்கிறான்.

“ஒன்றுமில்லை என்கிறாய் அப்புறம் ஏன் என் முகத்தப்பாக்கப் பயப்புடுற.என்ன பயமா?யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறியா”என அச்சம் தவிர்த்தவளாய் பேசினாள்.

இந்த கேள்விக்கு ஆமா என தலையாட்டி தன்னை ஒரு கோழையாக அவள் முன் அடையாளம் காட்டிக்கொள்ளவும் துணியாதவனாய்:யாருக்காகவும் எதற்காகவும் நான் ஏன் அஞ்சவேண்டும் என தன்னை அஞ்சா நெஞ்சனாக நெஞ்சை நிமிர்த்தி அவளுடன் செல்ல ஆண்சிங்கமாக சிலிர்துக்கொள்ளவும் அவசரம் இல்லாதவனாய் இருதலைக் கொள்ளி எறும்பாக அசைவற்று நின்றான்.

 

புரிந்துகொண்டாள் கமலா.”சரி நீ ரொம்ப யோசிக்கிற.இப்படியே நின்னுக்கிட்டே யோசிக்கப் போறியா?எதுவானாலும் இங்கயே யோசிச்சு முடிச்சிரு.நடந்துக்கிட்டே யோசிக்கிறது ஆபத்துப்பா.ஏன்னா பாதையில பள்ளம் மேடு இருக்கும்.வண்டிகள் போகும் வரும்.பாதையில கவனம் மாறுனா பயணம் அபாயம்பா.அதனால நல்லா நிதானமா நின்னு யோசிச்சுட்டு வீட்டுக்குப் போப்பா.பயந்தாங்கொல்லி....... .பயந்தாங்கொல்லி.”என அவனைக் கோழையாக்கி விட்டு அவள் தைரிய லட்சுமியாய் நடையைக் கட்டினாள்.

 

இந்தக் காட்சியைக் கண்ட சக மாணவர்கள் சும்மா இருப்பார்களா என்ன!.கமாலாவின் வீர வசனத்தைக் கேட்டு கை தட்டி ஆர்பரித்தார்கள்.திடுக்கிட்டுப்போன ராஜா வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்.அதிலே ஒரு தன்மானச்சிங்கம். ராஜாவின் தாழ்ந்த சிரத்தை நிமிர்த்தினான்.

“ராஜாவின் தலை எப்போதும் கவிழக்கூடாது.அவளோடு இணைந்து போனால்தானே பிரச்சனை அவள் முன்னாலயே போகட்டும்.நாம் பின்னாலயே போவோம்.வாடா வா”என ராஜாவின் முதுகைத் தட்டி அவளின் பின் அழைத்துச்சென்றனர்.

 

கமலா சற்று சில அடிகள் தூரத்தில் முந்தியும்.ராஜாவும் அவன் நண்பர்கள் கொஞ்சம் பிந்தியும் அதாவது சீதைக்குப் பின்னால் ராம சகோதரர்கள் பின் தொடர்வதுபோல் இருந்தது அந்தக் காட்சி.திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சத்தமில்லாச்சின்னச்சிரிப்பு செய்துகொண்டு பெண்ணுக்கே உரிய அழகு நடை நடந்து சென்று கொண்டிருந்தாள்.

 

போகும் வழியில் ஒரு ஓடைப்பாலம்.அதில் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற இளம் பெண்களை கேலிகிண்டல்.நையாண்டி,நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள் அர்த்தமில்லா சில அற்பர்கள்.இதெல்லாம் வாடிக்கைதானே என அதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கூத்துக் கோமாளித்தனமான சொற்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அவர்களைக் கடந்துகொண்டிருந்தாள்.அப்போது அதிலும் ஒரு நெஞ்சழுத்தக்காரன்.”நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு....பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு.”என அவளைப் பார்த்துப் பட்டுப்பாடிக்கொண்டே ஆட்டமும் போட்டான்.அதைக்கண்டு கொள்ளாத கமலா மேலும் தன் நடையைத் தொடர்ந்தாள்.      

 

“அடடே அதோ பார்ரா ராஜா பின்னால படையோட பாது காப்பா வாராரு. ராணியம்மா பத்திரமா பவணி போறாக.இது எப்படி இருக்கு.?”என நையாண்டி செய்தான்.அதற்கு அவன் உடனிருந்த அற்பர்கள்,”சூப்பரு”என ஒத்திசைத்தார்கள்.

 

கமலா தன் செருப்பைக் கழட்டினாள்.”பொறுக்கிப் பயல்களா....உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிகளே இல்லையாடா அயோக்ய நாய்ங்களா...வேல வெட்டி இல்லாத வெட்டிக் கழுதைங்க......இவா பொட்டச்சிதானன்னு அற்பமா நினச்சிங்களோ! அற்பப்புழுக்களா!......மத்த பொண்ணுக்கிட்ட ஆட்ன வால எங்கிட்ட ஆட்டலாமுன்னு நினைச்சேங்க அறுத்துருவேங் அறுத்து ஜாக்கிரத.....!”எனக் கழட்டிய செருப்பை சுழட்டி வீசினாள்.அவ்வளவுதான் அதற்கு மேலும் அங்கிருந்தால் ஆபத்து என உணர்ந்த அந்த அசிங்கப்பிறவிகள் ஓட ஆரம்பித்தார்கள்.

வீசியெறிந்த செருப்பை தன் காலில் திரும்பவும் மாட்டிக்கொண்டு வீர நாச்சியாராய் வெற்றி நடை போட்டாள் வீரமங்கை கமலா.

 

அவளை வைத்துக்கொண்டு பிரச்சனைக்குள் நுழையக்கூடாது என பொறுமை காத்த ராஜாவும் அவன் நண்பர்களும்.அவள் அவ்விடம் விட்டுக்கடந்ததும்.கலைந்து ஓட முயன்ற அந்த சாக்கடைக் கிருமிகளை மடக்கிப் பிடித்தார்கள்.

 

“ஏண்டா விசப்பூச்சிகளா.......உங்களுக்கு இதே வேலையாப் போச்சுல்ல..தெண்ட சோறு திங்கிற நாயுங்க....உங்களுக்குப் பொழுது போகலையின்னா பொழைக்கிற வழியப்பாத்து ஏதாவது வேல செஞ்சி அப்பன் ஆத்தா அக்கா தங்கச்சிங்களக் காப்பாத்துங்கடா.கல்யாண ஆச வந்தா ஏதாவது பொட்டக்கழுதையாப்பாத்துக் கட்டிக்கிட்டு மேக்க வேண்டியதுதானடா.ஏண்டா இப்படிப் படிக்க வாற பொண்ணுங்கள பாழாக்கப் பாக்குறீங்க பாவிங்களா.!......அட சண்டாளங்களா!உங்களப்போல அலையிற நச்சுப்பாம்புகளுக்குப் பயந்துக்கிட்டு தானடா பொண்ணுங்களப் பெத்தவங்க பொண்ணுங்களப் படிக்க அனுப்புறதுக்கே பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளயே பூட்டி வைக்கனுமுன்னு நினைக்கிறாங்க.இப்பத்தான் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களப் படிக்க வைக்க அனுப்புறாங்க.அதையும் கெடுத்துப் பழையபடியும் அவங்கள வீட்டுக்குள்ள அடைச்சிப் பூட்டுப்போட வச்சுருவீங்க போலிருக்க.நீசங்களா!.உங்களையெல்லாம் விட்டுவைக்கக் கூடாதுடா.எது உங்களச்சீண்டிவிடுதோ அத அறுத்துட்டா அப்புறம் இப்படிச்செய்யவேண்டிய அவசியம் இருக்காதுல்ல.....டேய் எடுறா அந்த பிளேட அறுத்துறலாம்”என ராஜா சொன்னவுடன் அவன் நண்பர்கள் அந்தக் கொடியவர்களைக் கீழே தள்ளிக் கிடத்தி பைகளுக்குள்ளிருந்து ஆளுக்கொரு பிளேடை எடுத்து கட்டுப்பாடு அறுவை சகிச்சை செய்யத் துணிந்தார்கள்.அவ்வளவுதான்.அந்த வீணர்கள் பயத்தில் அழுது ஓலமிட்டார்கள்.”தம்பிகளா நாங்க இனிமே இந்தப்பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டோம்.நீங்க நல்லா இருப்பீங்க எங்கள விட்டுடுங்க உங்களுக்குக் கோடிப்புண்ணியம்.நீங்க சொன்னமாதிரி ஏதாவது வேலைவெட்டி தேடி வெளி ஊருக்காவது ஓடிப்போயிருறோம்”என அலறித்துடித்து ஒப்பாரியிட்டார்கள்`

 

‘இல்ல இல்ல அது இருந்தாதான உங்களுக்குத் தொல்ல.நீங்க சும்மா இருந்தாலும் அது உங்கள சும்மா இருக்க விடாது.பயப்புடாதீங்க வலியில்லாமக் கட் பண்ணியிறலாம்.....புடிங்கடா”மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கத்தியை எடுத்தார்கள்.

 

“அய்யய்யோ ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா...நம்மள விடமாட்டாங்கப்பா......அய்யா சாமிங்களா நாங்க இன்னுமே இந்த ஊர்லயே இருக்கல எங்கயாவது கண்காணாத இடமாப் பாத்து ஓடிப் போயிடுறோம். எங்கள விட்டுடுங்க”எனக் கைகூப்பி வணங்கி காலில் விழுந்து அழுது தொழுதார்கள்.

 

“சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம் உங்கள எல்லாத்தையும் போலீசுல ஒப்படச்சிடுறோம்.அப்பத்தான அவங்க உங்களக் கண்காணிச்சிக்கிட்டு இருப்பாங்க.உங்க பேரையும் அவங்க பத்திரமா எழுதி வச்ச்சுக்குவாகல்ல....வாங்க வாங்க “என அத்தனை பேரையும் பத்திரமாக அடித்து இழுத்துக்கொண்டுபோய் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் குற்றவாளிகளுக்கு காவல் நிலையம் என்றாலே சிம்ம சொப்பனம்.காவல் என்று சொன்னாலே கால்டவுசர் நனைந்து விடும். 

.         .

(தொடரும்)

 

கொ`பெ`பி`அய்யா`

 

    .

 

 

கரிசல் காவியம் 19


கரிசல் மண்ணில் ஒரு காவியம்19

அத்தியாயம் 19

வெற்றி நடை பொட்டு நேர் கொண்ட பார்வையுடன் மனதில் எதிர்காலக் கடமைகளைச்சுமந்தவளாய்ப் பாடசாலைக்குச்செல்கிறாள் கமலா.ஊரின் கண்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பார்வையில் அவளை விசாரிக்கின்றன,

“என்ன கமலா இன்றுமுதல் உனக்கு விடுதலையா?”என வினவும் புது மலர்ச்சி காணத்தேடும் புதுமை நாடும் கண்கள் சில.

“மீண்டும் கல்வி கற்கச்செல்கிறாயா?”எனக் கேட்டு வரவேற்று அறியாமை இருள் நீங்காதா! என ஏங்கும் விழிகள் சில.

“காலம் மாறிவிட்டதா?”என வியந்து விரியும் பார்வைகள் சில.

“பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?”எனப் போற்றிமகிழும் புதிய சிந்தனைக்குக் காத்திருக்கும் கண்கள் சில.

“ம்ம்ம்ம் பொட்டக்கோழி கூவி பொழுது விடியரொஒன
னனவா போகிறது?”என வினவும் பத்தாம் பசலித்தனமான பாவ விழிகள் பல.

இப்படிப் பலப்பல விதமான பார்வைகளைக் கடந்து அவள் பள்ளிக்கூடம் நோக்கிய தன் பயணத்தைத் தொடர்கிறாள்.

கமலா இன்று பள்ளிக்கு மீண்டும் வருகிறாள் என்பதை அறிந்த அவளுடைய தோழமைகள் அவளை வரவேற்க பள்ளி வாசலில் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

“அதோ வருகிறாள் கமலா இதோ வந்துவிட்டாள் கமலா.மாதர்குல மாணிக்கம் வருகிறாள்,எதிர்கால இளைய தலைமுறையின் விடிவெள்ளி வருகிறாள்.நாகரிக வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் வருகிறாள். அடிமைத்தளை அறுத்த அற்புதப் பெண்ணவள் வருகிறாள்.பாரதியை சுமந்து வருகிறாள்.பகலவன் பெரியாரை ஏந்தி வருகிறாள்.சுயமரியாதை சொன்ன அதிசய மனிதர்களின் கனவுகளின் நிசமாய் வருகிறாள்”என வாசலில் கூடி நின்ற மாணவக் கண்மணிகள் சுதந்திரக் காற்றை சுவாசித்தவர்களாய் உற்சாக ஒலி எழுப்பிக்கொண்டு ஆரவாரத்தோடு கமலாவை புத்துணர்வோடு வரவேற்று வகுப்பறைக்குள் அழைத்துச்செல்கிறார்கள் ஆர்வம் கொண்ட சக நண்பர்கள்.

அத்தனை அன்பு வரவேற்பையும் வெற்றிக்களிப்போடு ஏற்றுக்கொண்ட கமலா.முதலில் தலைமை ஆசிரியரைச்சந்திக்கச்செல்கிறாள்.அதிகமாக ஆரவாரம் காட்டிக்கொள்ளாமல் அடக்கி வாசிக்கும் ராசா அவளுக்கு முன்பாகவே அவன் தலைமை ஆசிரியர் அறையில் இங்குதான் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறான்.அவன் பள்ளியின் முதல் மாணவன் என்பதால் அவனுக்குத் தலைமை ஆசிரியரிடமும் ஏனைய ஆசிரியர்களிடமும் அவனுக்கு நல்ல வரவேற்பு உண்டு.ஆகவே ராசாவின் முயற்சிக்கு ஆசிரியப்பெருமக்கள் உறுதுணையாக இருந்தார்கள்.இந்த வெற்றியில் ராசாவுக்கும் முக்கியப்பங்கு உண்டு என்பதால் அவனையும் ஆசிரிய மற்றும் மாணவ சமுதாயங்கள் மனம் உவந்து பாராட்டிக்கொண்டிருந்தன,

கமலா வருவதைக்கண்ட ராசா ஆனந்தக் களிப்பில் தன் மெல்லிய புன்னகையால் வரவேற்கிறான்.அவள் தன் நன்றியை கைகளைக் கூப்பி கண்களில் பெண்விடுதலை வெற்றிக் கண்ணீர் நிறப்பி ஆராதிக்கிறாள்.

“வாழ்க நீ “என தன் பூரிக்கும் விழிகள் பொங்க வாழ்த்துகிறான்.கமலா தலைமை ஆசிரியரின் அறைக்குள் கைகள் கூப்பி வணங்கிய வண்ணம் சென்று அவருடைய பாதங்களில் பணிந்து ஆசிர்வாதம் பெறுகிறாள்.கமலாவை தன் இருகரங்களால் தூக்கி நிறுத்தி விழிகளை துடைத்துவிட்டு ஒரு மகளிடம் ஒரு தந்தை காட்டும் பாசமாகப் பரிமாறிக்கொள்கிறார்.

“நல்லது.நீ எதை நினைத்தாயோ அதில் உறுதியாக நின்று சாதித்துவிட்டாய்.உன் சாதனை இன்றைய பெண்குலத்திற்கு ஒரு தூண்டலாக இருக்கட்டும்.இனி எதிர்காலப் பெண்ணினம் விழித்துக்கொள்ளும்.நீ ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தாலும் எதிர் கால உலகில் உனக்கும் உரிய கடமைகள் உண்டு என்பதை நீ உணர்ந்து கொண்டதால்தான் உன்னை நீயே தட்டி எழுப்பிக்கொண்டாய்.
உனக்குள் எழுந்த அந்த உணர்வுத் தூண்டல்களுக்கு எழுத்துக்களைத் தந்து வாழும் மகான்களை நீ மனதில் எண்ணிக்கொள்.அவர்கள் உனக்கு ஒளியாக ஒளிர்ந்து உனக்குள் வழி காட்டுவார்கள்.பெரியவர்கள் கண்ட கனவிற்கு இன்று நீ விடையாகி விளங்குகின்றாய்.
உன்னுடைய எழுச்சியும் துணிவும் எதிர் காலத்திற்கு ஒரு சவாலாக விளங்கட்டும்.இப்போது எனக்குள்ளும் ஒரு நம்பிக்கை பிறந்துவிட்டது.இனி பெண்மை பழமைக்குள் மயங்கிக் கிடந்து மங்கிவிடாது.மீண்டும ஆண்டாள்கள், ஔவைகள்,சரோஜினிகள்,நாச்சியார்கள்,லட்சுமிபாய்கள்,மங்கையர்கரசிகள் போன்ற அதிசயப் பெண்குலம் தோன்றி இவ்வையம் சம உரிமையுடன் வாழ முன்னோடி வழி காட்டும்.நீயும் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் ஒரு அங்கம் வகிக்க வேண்டும் என நான் என் மனதார வாழ்த்துகிறேன்.வாழ்க!என வாழ்த்தி,”

“ராசா!கமலாவை வகுப்பறைக்கு கூட்டிட்டுப்போ” என கட்டளையிட ராசா கமலாவை வகுப்பறைக்கு வழிகாட்டி அழைத்துச்செல்கிறான்.

(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.

Friday, 14 March 2014

கரிசல்காவியம் 17

கரிசல் மண்ணில் ஒரு காவியம்17

அத்தியாயம் 17

கூண்டுக்கிளி ஒன்று விடுதலை பெற்று அது தன் சிறகுகளை விரித்து ஆனந்தமாக விண்ணில் பாய்ந்து பறப்பது போன்ற உணர்வில் கமலா ஆனந்தக்களிப்பில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்து உற்சாகமுடன்  ஓடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் மகிழ்ச்சியைக் கொண்டாடினாள்.பழமையை பாராட்டி வந்த ஆச்சி தோற்றுப்போனவளாய் ஒரு மூலையில் சுருண்டு கிடந்து கமலாவின் எழுச்சி கண்டு ஏதும் பேசமுடியாதவளாய் உம்மென்ற மூஞ்சியுடன் தனிமைப்பட்டுப் போனாள்.

அதிகாலைப்பொழுதில் பறவைக் கூட்டங்கள் பாடிப்பறந்த வண்ணமாக இருந்தன.வானம் வெளுத்து அது தன் வீதியெங்கும் மஞ்சள் வண்ண ஒளியைப் பூசி மங்களம் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தது.கமலா இன்று மீண்டும் பள்ளிக்குச்செல்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதோ என்னவோ அந்த விடிகாலைப் பொழுதும்.வழக்கத்திற்கு மாறாகவே உலகம் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் காணப்பட்டது.

கமலாவின் விடுதலைக்காகப் போராடிய ராஜா கமலாவின் சுதந்திர கீதத்தை ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ரசித்துக்கொண்டிருந்தான்.அப்போது ஜன்னல் வழியே ஒரு காகிதச்சுருள் பறந்துவந்து அவன் காலடியில் பணிந்தது.என்னவென்று எடுத்து அதை விரிக்கிறான்.அது கமலாவின் கைவண்ணத்தில் உருவான அவள் இதயம் வரைந்த எழுத்தோவியம்.

பௌர்ணமி ஒளியில் பரவசம் ஆடும் கடல் அலைகளென அவன் கற்பனைகள்.ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன.வள்ளுவன் எழுதிய முதல் குரல் கண்டு தமிழன்னை எந்த அளவில் ஆனந்தம் அடைந்திருப்பாளோ அந்த ஆனந்தத்தின் விளக்கம் இன்று அவன் முகத்தில் ஒளிர்ந்தது.இன்பத் திளைப்பில் அவன் இதயம் துடித்த வேகத்தின் அளவை எந்தக் கருவி கொண்டும் அளவிட முடியாது.விழிகள் விரிகின்றன.கடிதத்தில் விளைந்து குவிந்து கிடக்கும் மணிகளை அள்ளி ஆராதிக்க ஆவல் கொண்டு பாய்கின்றன.அந்தப் பாய்ச்சலின் வெப்பத்தைக் குளிர்விக்க விழிகளில் பனித்துளிகள் துளிர்க்கின்றன.

எழுத்தில் கோர்க்கப்பட்ட அந்த முத்து மாலைகளை அவன் கண்கள் தம்மில் ஒத்திக்கொள்கின்றன.வாசம் நுகர்ந்து பாசமுடன் படிக்கின்றன.ஆசைகள் வரிகளை நகர்த்துகின்றன.

“என் இதயம் நிறைந்த ராஜா!இன்று உன்னால் எனக்கு விடுதலை.இது என் வாழ் நாளில் ஒரு விடிவு காலம்.எனக்கு விடியலைத் தந்துதவிய பகலவன் நீ!உனக்கு நன்றி சொல்ல என்னிடம் போதுமான அளவில் சொற்கள் இல்லை.தேடிக் கண்டு அகப்பட்ட சில சொற்களால் மட்டும் போற்றி உன்னை ஆராதிக்கிறேன்.என் கரங்கள் உன் திசை நோக்கித் தொழுகின்றன.என் விழிகள் உன்னை அர்சிக்கத் தேடுகின்றனஅவைகள் தீர்த்தம் நிரப்பிக்கொண்டு காத்துக்கிடக்கின்றன.என் இதழ்கள் உன் புகழ் பாடுகின்றன.இந்தப் பூஜை வேண்டுதலை ஏற்றுக்கொள்ள பள்ளியில் வீற்றிருக்க வேண்டுகிறேன்.

நன்றி!

இப்படிக்கு
உன் அன்பின் மலர் கமலம்.”

பிறவிக்குருடன் பார்வை பெற்றார்ப்போல் ஆனந்தக் கூத்தாடினான்ராஜா.
அக்கடிதத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஜன்னலைப்பார்க்கிறான் ராஜா.அங்கே முல்லைத் தோட்டமாய் கமலாவின் காட்சி.நாடு மக்களாட்சி மலர்ந்த நாளில் நிறைந்த மலர்ச்சி.

“ராஜா”அன்புத்தாயின் அழைப்பு.”பள்ளிக்கூடம் போக நேரம் ஆகலையா?”

“இதோ வாரேம்மா” கடிதத்தை பூப்போன்று இதமாக மடித்து தன் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

“ஆமா அங்க என்னடா பண்ற”

(தொடரும்}.


கொ`பெ`பிச் சையா.
 

Sunday, 23 February 2014

கரிசல்காவியம்13

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.13

அத்தியாயம் 13.

ராசா இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான்.ஒரே பாட்டும் ஆட்டமுமாக மிகவும் ஆனந்தமாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஆடிக் கொண்டாட்டமாக் காணப்பட்டான்.இதைக்கண்ட அவன் தாய்,”என்ன இவனுக்கு ஆச்சு?என்னைக்கும் இல்லாத பொங்கம் இவனுக்கு.”என எண்ணிய அவள் “டேய் ராசா என்னடா உனக்கு?இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கே? என்னடா சங்கதி?” எனக் கேட்டாள்.

“அப்படியா?அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.அடுத்த வாரம் பரிச்ச வருதுல்ல அதான்.வேற ஒண்ணுமா இல்லம்மா.”எனச்சமாளித்தான்.
‘டேய் பெத்தவளுக்கு தெரியாதா புள்ளயோட அருமை.எல்லாம் எனக்குத் தெரியுண்டா. பரிச்சயின்னா எல்லாருக்கும் பயம்தான வரும்.நீ என்னமோ புதுசா சொல்லுற.உண்மையச்சொல்லு.வேறென்னமோ இருக்கு.”எனத் துருவினாள் தாய்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே!.என்னைக்கும் போலத்தான் இன்னைக்கும்இருக்கேன்
 ஏம்மா அப்படிக்கேக்குற?”என அசடு வழிந்தான்.
“டேய் தெரியுண்டா மவனே!சும்மா சொல்லு. கமாலாவப் பாத்தியாக்கும்.?”என அவளும் ஆமோதிப்பதுபோல் போட்டு வாங்கினாள்.

“அது......அது ......அது வந்து.........எனச் சொல்லை வழுக்கி இழுத்தவன அப்புறம் தயங்கியவனாய் “அதெல்லாம் இல்லயே......என்ன நீ சும்மா சும்மா நோண்டி நோண்டிகா கேள்வியாகா கேக்குறே.நாநாதாங் ஒண்ணும் இல்லேங்கிறல்ல.
அப்புறம் சும்மா சும்மா நொய் நொய்னுக்கிட்டு:”எனத் தாயிடம் உண்மையை மறைக்க முயன்றான்.

“இல்ல எங்கிட்ட எதையோ மறைக்கிற.நீ எத எங்கிட்ட மறைக்கனுமன்னு நினைக்கிறியோ அது எனக்கு புடிக்காத விசயம்ன்னு ஒளிக்கிற..........டேய் நீ வளர்றதப் பாத்துப் பாத்து பெருமைப் படுறேங்.ஆனா அதே நேரத்துல எனக்குப் பயமாவும் இருக்கு,உனக்கு அப்பா இல்லேங்கிற குறை தெரியக்கூடாதுன்னு செல்லமா வளத்துட்டேங். நாளக்கி யாரும் உன்னப்பாத்து “நீ என்னதாங் இருந்தாலும் பொம்பள வளத்த புள்ளதான............அறுதலி (தாலி அறுத்தவள்) வளத்த புள்ளதான.அதாங் அடங்காம அலையுறேன்னு ஊர்ல உள்ளவங்க கேவலமா பேசியிறக்  கூடாதேன்னு உன்னப் பொத்திபா பொத்தி வளக்குறேங்.ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவி யோன்னுதான் எனக்குப் பயமா இருக்கு.”எனத் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் தட்டித் துடைத்தாள்.

“அம்மா ஏம்மா அழுகுற.
அப்படியெல்லாம் உன்ன அசிங்கப்படுத்துற மாதிரி நடக்க மாட்டேம்மா.என்னய நம்பும்மா”எனத் தாயைத் தன்னிடம் தவறில்லை என்பதை நம்ப வைக்க முயற்சித்தான்.ஆனாலும் இவன் பொய் சொல்லவும் கற்றுக்கொண்டான் என்பதையும் புரிந்து கொண்டாள்.காதல் மலரும் போதே இயல்பாக பொய்யும் பூத்து விடும் என்பதும் இயற்கைதானே.தன் பிள்ளையின் வளர்சியைக் கண்டு மகிழும் பெற்றோர்க்கு கூடவே பயமும் சேர்ந்து வளர்வதும் இயற்கைதான்.
ஏனென்றால் எல்லாப் பெற்றோரும் தன் பிள்ளைகள் இச்சமுதாயத்தில் நல்லவர்களாகப் போற்றப்பட வேண்டும் ..அதைப்பார்த்துப் பெருமை அடைய வேண்டும் என்றுதானே கனவுகளோடு வாழ்கிறார்கள்.அதற்கு ராசாவின் தாயார் மட்டும் விதிவிலக்கா என்ன?அவள் தன் பிள்ளை இந்த வயதிலேயே காதல் வயப்பட்டு கல்வியில் கவனம் தவறி விடுவானோ என்ற அச்சம் அவளைப் பற்றிக்க் கொண்டது.அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க மீண்டும் மீண்டும் சில வினாக்களைத் தொடுக்கிறாள் 

“டேய் இங்க பாரு! இது பருத்தி மாறு புடுங்கிக் காச்சுப்போன கைகள்..ஊர்ல உள்ளவகெல்லாம் சொல்றாங்க "வயசு வந்த புள்ளய வீட்ல வச்சுக்கிட்டு நீ ஏங் இப்படிக்கஷ்டப்படனும்.
அவனப் படிக்க வச்சு என்ன பண்ணப்போற.இந்தக் காலத்துல படிச்சவங்களுக்கு எல்லாம் வேல கிடக்கிறதாக்கும்.பைத்தியக்காரி.அவன ஒரு வேலவெட்டிக்குகு அனுப்பாம இப்படி வீட்ல வச்சு அழகு பாக்குறய.இப்படி படிப்பு படிப்புன்னு படிக்க வக்கிறியே அவங் நாளக்கி உன்னயத் தெருவில சட்டிதான் எடுக்கவிடப் போறாங் பாருன்னு" எங்கிட்ட உன்னயப்பத்தி அவங்க அப்படிப் பேசும்போது அவங்ககிட்ட நாங் என்ன சொல்லுவேங் தெரியுமா.’அடி போங்கடி!பொறாம புடிச்சவளுகளா ஏம்புள்ளயப்பத்தி எனக்குத் தெரியும்முடி.உங்க புத்தி மதி ஒண்ணும் எனக்குத் தேவ இல்ல.நாங் கஷ்டப்படுறது போதாதா ஏம்புள்ளையும் இந்தக் கஷ்டத்த அனுபவிக்கனுமா?அவங் எனக்குக் கஞ்சி ஊத்துனாலும் சரி ஊதாட்டியும் சரி.அதப்பத்தி எனக்குக் கவல இல்ல. உழைக்க முடிஞ்ச வரைக்கும் உழப்பேங் முடியாட்டி ஏதாவது மாத்திறையப் போட்டு செத்துருவேண்டி”.ன்னு அவளுககிட்ட  விட்டுக் குடுக்காம வீர்ர்ப்பாப் பேசி உன்ன நம்பி இந்த உசுர உனக்காக சுமந்துக்கிட்டு இருக்கேண்டா ராசா !ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுராதய்யா எஞ்சாமி. எனக்குப் பயமா இருக்குய்யா.”என தன் மனத்தில் உள்ளதெல்லாம் கொட்டி அவளுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்பதைகா கூறித் தன் எண்ணங்களின் உணர்வுகளை கண்ணீர் வழிய வடித்துக் காட்டினாள்.

“அம்மா ஏம்மா நீ அழுகுற.நீ பயப்படுற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆவாதும்மா .என்னைய நம்பும்மா.நாங் ஒம்புள்ளம்மா.நிச்சயமா ஒம்பேரக் காப்பாத்துவேம்மா.என்னைய நம்பும்மா....கமலா பழையபடி பள்ளிக்கூடம்வாராளாம்மா.
அவ ஒரு பொண்ணுங்கிறாதால்ல அவ படிப்புக் கெட்டுறக்கூடாதுல்ல.
அதனால அவா திரும்பவும் படிக்கப்போறாங்குற சந்தோசந்தாம்மா எனக்கு.
வேறொண்ணும் இல்லம்மா.
என்னைய நீ புரிஞ்சுக் கோம்மா””எனத் தன் அம்மாவை சமாதானப்படுத்தி நம்பிக்கையூட்டினான்.    

“அது நல்ல விசயன்தாங் கண்ணு.அவ பள்ளிக்கூடம் வந்தாலும் அவகிட்ட முன்ன மாதிரியெல்லாம் ரொம்பப் பழகக்கூடாது.என்ன! அவா ஒரு வயசுப்பொண்ணு.
மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரியாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் தெரிஞ்சதா.போ பள்ளிக்கூடம் நேரமாச்சுல்ல பொறப்புடு.
மத்தியானச் சாப்பாடு கம்மந்தோச சுட்டு மொளகாத் தொவையல் அறைச்சி மூடி வச்சிருக்கேங்.சோறு வேணும்னாலும் அடுப்புல கவுத்தி வச்சிருக்கேங்.உனக்கு எதுவேணுமோ  சாப்புட்டுக்கோசாப்புட்டுட்டு ஏனத்தக் நல்லாக் கழுவி மூடி வச்சுரு.நாங் முதலாளி வீட்டுப் புஞ்சைக்கு மாறுபுடுங்கப் போறேங்.
பள்ளிக் கூடம் போகும்போது கதவால நல்லாச்சாத்திக்
கயிறு வச்சு நல்லா இறுக்கிக் கட்டிட்டுப்போ!ஏன்னா தொறந்து போட்டுப் போய்ட்டி யின்னா நாய் வந்து எல்லாத்தையும் தின்னுட்டுப் போயிரும்.பாத்துக்கோ!" என மக்கனுக்கு சொல்ல வேண்டிய தெல்லாம் சொல்லிவிட்டு வேக வேகமாக வேலைக்கு விரைந்தாள் அந்த அன்னை.

ராசாவும் மணமணக்கும் கம்மந்தோசை தொட்டுக் கொள்ள மொளகாத் தொவையல். நல்லா ருசிச்சு  சாப்பிட்டுவிட்டு பாத்திரங் களைக் கழுவிபா பத்திரமாக மூடி வைத்துவிட்டு வீட்டுக் கதவை கயிற்றால் இழுத்தே  இறுக்கிக் கட்டிவிட்டு தன் பைக்கூட்டைத் தூக்கிக் கொண்டுபள்ளிக்குக் கிளம்பினான்.  

வழக்கமாகப் பார்ப்பதுபோல் கமலா வீட்டு ஜன்னலைப் பார்க்கிறான். அவள் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ராஜாவை ஏக்கமுடன் நோக்குகிறாள்.எல்லாவற்றையும் அவளும் கேட்டுவிட்டவளாய் தன் பார்வையில் கண்ணீர் ஒழுக விட்டுக் காட்டுகிறாள்.அம்மா சொன்னதெல்லாம் கேட்டுவிட்டாளோ என எண்ணி தன் தலையை தொங்க விடுகிறான்.அவன் மௌனம் ,”ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னாள்.அவள் பெற்ற்வளாச்சே அவள் பிள்ளையைப்பற்றி அவளுக்குக் கவலை.அதனால் என்ன?அம்மாவை நான் சமாளிதுக்கொள்கிறேன்”என்பதுபோல் தன் ஆறுதலான பார்வையில் அவளுக்கு உணர்த்தினான்.

சரி விடு பெற்றவள் அவள் உன்னை விட்டுக் கொடுத்து விடுவாளா?கடவுள் விட்டபடி நடக்கட்டும்.பார்த்துக்கொள்ளலாம் என அவளும் தன்னையும் அவனையும் தேற்றும் விதத்தில் ஒழுகும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனிடம் பேசுவதற்கு ஆயத்தமான சைகையில் க்குக்கும் எனச்செறுமி உணர்த்தினாள்.அதையும் புரிந்து கொண்டு தன் நோக்கை மெதுவாக மேலே உயர்த்தி .என்ன சொல்லப்போகிறாய் எனும் சாடையில் ஆர்வத்தில் அவளைப்  பரிவோடு பார்க்கிறான்.

மெதுவான தளதளத்த குரலில் “ராசா!எனும் அழைப்பிலேயே அவளையும் மீறி கண்கள் சொரிகிறது.அவளை அதற்குமேல் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் என்பதுபோல் .நீ ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனும் விதத்தில் மௌனத்தில் தன் தலை அசைத்து மறுமொழி செய்து தன் கைகளைக் காட்டி நான் வருகிறேன் எனச் சொல்வதுபோல் அவளைப் பார்த்துக் கொண்டே நகர்கிறான்.

ஆனாலும் கமலா ,ராசா! நாங் சொன்னது ஞாபகம் இருக்குல்ல சார்ட்டச் சொல்லி எப்படியாவது எங்க அப்பாட்ட வந்து பேசச்சொல்லு.நாங் இந்த சிறைச்சாலையை விட்டு எப்படியாவது வெளியில வரணும்.அதுக்கு நீதாங் உதவனும் எனக் கூறி தன் கைகளைக்கூப்பி வணங்கி கண்ணீரால் விடையளித்தாள். உதிர்த்தக் கண்ணீருடன் ஓரம் ஒதுங்கி மௌனமாக அழுதாள்.

.அப்போது அவன் நெஞ்சே கசங்கி விட்டதுபோல் வலியை `அடக்கிப்பார்த்தும் அடக்க முடியாதவனாய் கதறி ஓசை வெளியில் வராதபடிக்குதன் வாயைப்பொத்திக் கொள்கிறான்.பின் சமாளித்துக்கொண்டு தன் வழியும் விழிகளைத் துடைத்து மேலும் அவள் சோக முகத்தைக் காணத் துணிவில்லாதவனாய் தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு வேகமாக் நடந்தான். தொடர்ந்து தன் கண்களில் உதிர்த்தும் துடைத்தும் கொண்டும்......

(தொடரும்}
கொ.பெ.பி.அய்யா.

Thursday, 20 February 2014

கரிசல் காவியம்12

கரிசல் மண்ணில் ஓர் காவியம்...12
அத்தியாயம்—12
கமலாவுக்குள் பாரதி குடியேறிவிட்டான்.அவளுடைய நம்பிக்கை,தெளிவு,தீர்வு,அறிவு,பலம் என அத்தனை சக்திகளும் பன்மடங்காய் பெருகி அவள் ஒரு மகா சக்தியாக உருவெடுத்தாள்.இனி என்னுடைய எதிர் காலத்தை நான்தான் தீர்மானிப்பேன். எனக்கும் அறிவு இருக்கிறது.என்னுடைய உரிமைகளைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.நான் எதை அடைய வேண்டுமென முடிவெடுக்கிறேன் என்பது என்னுடையது.என எண்ணியவாறு சட்டென்று எழுந்தவள் அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளைத் திறந்தாள்.வெளி உலக வெளிச்சம் அவள் கண்களில் பிரகாசித்தது.இருண்டு கிடந்த உள்ளறையில் ஒளி பரவி அவளுடைய உருவத்தை ஜன்னல் கம்பிகளைத் தாண்டி சுவாசிக்கச் செய்தது.
கைகள் கட்டப்பட்டு அடங்கிக்கிடப்பது போன்ற நிலை மாறி இதுவரை இல்லாத ஒரு புது உத்வேகம் அவளுக்குள் ஏற்பட்டது.அது அவளுக்கு அதிசயமாகவும் தைரியம் சொல்லும் ஊக்கமாகவும்  இருந்தது.ஜன்னலுக்கு வெளியே தேடிய கண்கள் ~எங்கே ராஜாவைக்காணோம்~ என அங்கும் இங்கும் எட்டி எட்டித் தேடின.வழக்கம்போல் ஒரு பாட்டு ஒண்ணு பாடுவாளே.அதை அன்றும் பாடுகிறாள்.
கண்ணா கருமை நிறக் கண்ணா .....உனைக்காணாத கண்ணில்லையே.”அப்போது அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மா மரத்தின் கிளையில் படுத்து தன் சிந்தனையில் என்றோ ஒருநாள் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினை எண்ணி தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்தான்.
பள்ளிக்கு ஒரு நாள் செல்லும்போது  இலேசாக பின் புறத்தில் கிழிந்திருந்த சின்ன ஓட்டையுள்ள தனது கால்ச்சட்டையை அணிந்து சென்றிருந்தான்.தேடிப்பார்த்தும் அன்று அவனுக்குக் கிடைத்த டவுசர் அதுதான்.வறுமையின் அடையாளமும் அதுதான்.அதைக்கண்ட சக மாணவர்கள் அவனைப்பார்த்துக் கேலி செய்தனர்.`ஓட்டைக் குண்டிப் பயடா இவன் “ என நக்கலாக அவனைப்பார்த்துச் சிரித்தனர்.அந்தக் குறும்புக்கார மாணவர்களில் ஒருவன் அந்தக்கிழிந்த ஓட்டையில் விரலைவிட்டு இழுத்து ஓட்டையைப் பெருசாக்கிவிட்டான்.
வீட்டில் மாற்றிக்கொள்வதற்கு வேறு சட்டையும் இல்லை.பின்னால் டவுசரை திரும்பிப்பார்த்தான்.ஓட்டை பெரிதாகி கிழிந்து தொங்கியது.ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது “டேய் ஏண்டா என்டவுசரக் கிழிச்ச” என சற்று ஓங்கிய குரலில் கேட்டான்.அதற்கு அந்த மாணவன் “அப்படிதாண்டா கிழிப்பேன்.நீ ஓட்டக்குண்டியா வந்தா கிழிக்காமலா இருப்போம்”என ராஜாவின் எரிச்சலை தூண்டும் விதமாகவே பேசினான்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கமலா வேகமாக வந்து “பாவண்டா ராஜா.அவங்க ரொம்ப ஏழடா.வேற சட்ட இருந்தா போட்டுக்கிட்டு வரமாட்டானா?ஏண்டா இப்படிச்செஞ்சே”என இரக்கப்பட்ட குரலில் கேட்டாள்”
நீ என்ன அவனுக்கு சப்போட்டா?இது அவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சன எடையில நீ எதுக்கு வாற".என பேசிக்கொண்டே அவளைத் தள்ளிவிட்டான் அந்த சேட்டைக்கார சிறுவன்.அதைக்கண்ட ராஜாவிற்கு வேகம் பொத்துக் கொண்டுகிளம்பியது.
அதுவரை பேச்சாகப் பொறுமையிலேயே பேசிக்க்கொண்டிருந்தவன் அதிரடியாக அந்த வம்புக்காரனின் சட்டையை எட்டிப்பிடித்தான் ‘டேய் ”சண்டைக்கு வாறதா இருந்தா எங்கூட வாடா கமலாவ ஏண்டா தள்ளிவிட்ட.”என ”அவனைப் பிடித்து இவன்தள்ளினான்.
இப்படியே சண்டை வளர்வதைக்கண்ட கமலா அழுதுகொண்டே சென்று ஆசிரியரிடம் முறையிட்டாள்`ஆசிரியர் அந்த சிறுவனைக் கண்டித்து முட்டி போடச்சொன்னார்.அன்று இந்த ராஜாவுக்காக அந்தப் பயலிடம்  எம்புட்டுக் கோபபட்டாள் என்பதை அவள் இவன் மீது வைத்திருந்த அன்பாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.அந்த வேளையில் இந்த பாட்டும் அவனிடம் போயச் சேர்ந்தது.
படீரெனத் துள்ளி எழுந்தான்.அவன் படுத்திருந்தது ஒரு சிறு மரக்கிளை என்பதையும் மறந்தான்.பாவம் சம நிலை சமாளிக்க முடியாமல் பொத்தெனக் கீழே விழுந்தான்.மரக்கிளையின் குச்சி ஒன்று குத்தி இலேசான சிராய்ப்பு.ரத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அதை அவன் கண்டுக் கொள்ளவில்லை.ஜன்னல் பக்கமாக ஓடினான்.இவன் ஓட ஓட பாட்டும் இவனை வாடா வாடா என அவ்வசரப்படுத்துவதுபோல் இருந்தது,தவித்து இளைத்து ஜன்னலைக் கண்டு நின்றான்.அவள் இவனைக்கண்டதும் இன்னும் பாட்டின் விசையைக்கூட்டி உன்னைத் தேடித்தானடா இந்தப்பாட்டு என்பதுபோல் அழுத்திப் பாடினாள்.பார்த்த பின்னும் பாட்டு நிற்கவில்லை.மகுடி கண்டு மயங்கிய நாகத்தைப்போல் தன்னை மறந்தவனாய் இது நிசந்தானா என்பதுபோல் வியந்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட சிலையாகி நின்றான்.
அப்போதும் அவள் பாடிக்கொண்டுதான் தொடர்கிறாள்.பேச்சை அவன் ஆரம்பிக்கிறானா என கால அவகாசம் கொடுக்கிறாளா?இல்லை பரிட்சிக்கிறாளா?அவள் இதழ்கள் பாட்டை வாசித்தாலும் அவள் இதயம் அவளுக்குள் அழுகிறது.அதை அவள் கண்கள் கண்ணீரால் சொல்கிறது.பாடிக்கொண்டே அவனைப்பார்க்கிறாள்.
இத்தனை நாளும் நானும் உன்னைத் தேடாம லில்லை.என்பதைக்
கூறுவதுபோல் தன் விழிகள் உதிர்க்கும் துளிகளை தன் முந்தானையால் துடைக்கிறாள்.என்னை நீயும் நினைத்தாயா என விசாரிப்பது போன்று பாட்டை நிறுத்திவிட்டு இமை தட்டாது அவள் அவனை நோக்கும்போது அவள் கண்கள் நீருக்குள் மீன்களாய் நீந்துகின்றன.அம்மீன்கள் துள்ளும்போது சிதறும் நீர்த் திவளைகளாய் அவள் தன் சுட்டு விரல்களால் சுண்டிவிடும் கண்ணீர்த் துளிகள் இவன் மீது படுகின்றன.பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ என்பதுபோல் இருவரும் கண்களாலேயே நலம் விசாரித்துக்கொண்டு அசையா ஓவியம் போல் பேச வார்த்தைகளை மௌனமாக தங்கள் சிந்தையில் தேடுகிறார்கள்.இப்போது யார் முதலில் தொடர்வது.
அந்த வகையில் ஆண்கள் பொறுமையை இழந்தவர்கள்தான்.அதுதானே ஆண்மை.பெண்கள் இந்தவகையில் முந்துவதும் அவ்வளவாக ரசனை இருக்காது,அதனாலும் பெண் புத்தி பின் புத்தி என்பரோ!ஆனாலும் அதுதானே பெண்மையின் அழகும் தனிச்சிறபபும்.பெண்மை என்பதே மென்மை தானே.
அதனால் இப்படிப்பட்ட சிக்கலான தருணங்களில் அவர்களுக்கு அழுதுவிடுவதே மிகவும் எளிமையாகி‌ விடுகிறது.

'கமலா.............................................'~!என சொல்லும் போது அவன் உதடுகள் துடிக்கின்றன கண்கள் கலங்குகின்றன.அவனையும் மீறி அழுகின்றன.வார்த்தைகள் வரிசையில் வரத் தடுமாற்றம் அடைகின்றன.இருந்தாலும் இழுத்து வந்து நிறுத்தப் போராடுகின்றான்.சொற்கள் கோர்வைக்குள் வரத் தயங்கி தனித் தனியே ஒவ்வொன்றாக இடைவெளி விட்டுச் சேர்ந்து வரச்சிரமப்படுகின்றன.
ஆனாலும் சமாளிக்கிறான்.
மீண்டும் ஆரம்பிக்கிறான் கமலா.......!ஏம்மேலே உனக்குக் கோபமா?அன்னைக்கு ஆச்சி...........என இழுத்து மேலும் தொடர்வதற்கு சிரமப்பட்டு அழுகிறான்.இப்பொழுது கமலா வாய் திறக்கிறாள்..
‘‘எல்லாம் எனக்குத் தெரியும்.அன்னிக்கு ஆச்சி மேலத்தான் தப்பு.எங்க அப்பா கூட ஆச்சியத்தான் திட்டுனாரு.ஆச்சி அப்படித்தான்.பாவம்!நீயும் உங்க அம்மாவும்........சரி...சரி...அழாதே.........அதான்....நாங் இப்போ பேசிட்டேங்ல்ல.அப்பொறம்
என்ன? டேய் ராஜா நீ எனக்கு ஒரு உதவி செய்வீயா?
“உதவியா......என்ன செயனும்?சொல்லு சொல்லு!:."எங்க அம்மாகூட உங்கூடப் பேசுறது தப்புண்ணுதாங் திட்டுறா.நீ என்னமோ வயசுக்கு வந்துட்டயாமே.வயசுக்கு வந்த பொண்ணுங்கிட்ட ஆம்பளப் பசங்க பேசுனாதப்பாமே!"
எனக் கிறுக்குத்தனமாக உளறினான் ராஜா.
சீ...ப்....போடா மடையா......இனிமே நாம யாருக்கும் பயப்பட வேண்டியதேஇல்ல......
ஆமாண்டா நானும் பள்ளிக்கூடம் வர்ப்போறேங்.....+2 பரிச்ச வருதுல்ல,.......படிக்கனும்ல்ல..என சகசமாகவே கமலா கூறினாள்`
அப்போ பள்ளிக்கூடம் வருவியா?நிசமாவா?........எனச்சந்தோஷதில் ஆச்சர்யப்பட்டான் ராஜா.  
ஹூம்....... அதனாலதான் நீ எனக்கு ஒரு உதவி செய்ணும்.
நாங் என்ன கமலா செய்ணும்.'
“ஆமா ....நம்ம சாரட்ட சொல்லி எங்க அப்பாட்ட பேசச்சொல்லனும்.சார் சொன்னா எங்க அப்பா கேப்பாரு.”
‘கேப்பாரா’``````````````/?என வடிவேல் குரலில் பேசினான் ராஜா.
இப்போது கமலா கல கல வென சிரித்தாள்`கமலா சிரித்ததும்ராஜாவும் சிரித்தான். சோகம் மாறியது.
சுந்தரம் தொடர்கிறது.
(தொடரும்)

கொ.பெ,பி.அய்யா.

Monday, 17 February 2014

கரிசல் காவியம்4

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.4
அத்தியாயம் 4
காதல் அறியாத வயது.ஆனாலும் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு.அதை குழந்தைத்தனமான அறிவற்ற மோகனம் என்றுகூடச் சொல்லலாம்.என் சோட்டுப் பசங்களிடம் நான் கொண்டிராத ஒரு விதமான தோழமைப்பற்றை அவளிடம் நான் கொண்டாடினேன் 
என்பது மட்டும் என் நினைவில் நிற்கிறது.பால் வேற்றுமை எங்களுக்குள் ஆரம்ப காலப் பழக்கத்தில் இல்லை .ஆனால் உணர்வில் ஒளிந்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.
அப்பருவத்தில் அது தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.
காலப்போக்கில் அறிவும் அனுபவமும் வளர வளர அதுவே எங்களுக்குள் இயல்பாகவே காதலாக துளிர்விட ஆரம்பித்ததோ என்னவோ எனக்குப் புரியவில்லை.
பிஞ்சாக இருக்கும்போது தொடங்கிய அந்த நட்பு.பருவம் வளர வளர பால் வேற்றுமை புரியத் தொடங்கி காதலாக கருத்தியல் மாற்றம் ஆகியிருக்கலாம்.ஆனால் அப்போததை என்னால் காதலாக உணரத் தெரியவில்லை. குழந்தைத் தனத்தில்  இயல்பாகத் தோன்றிய அந்த ஈர்ப்பு  பால்வேற்றுமை புரியும்போது காதலாகக் கனிந்தது பருவ முதிர்ச்சியாகத்தானே இருக்கும்!
குழந்தைகளாக பழகியபோது அஞ்சாமல் ஆடிய ஆட்டமும் பாட்டமும் வாலிபமாக மாற மாற பருவம் முதிர்ந்து முற்றியபோது அஞ்சி ஒளிந்து கொள்ளமுயன்றது.
அந்த அச்சம்தான் நட்பைக் காதலாக மலரத் தூண்டியது.
பொதுவாக ஒன்றின் ஓட்டம் இயல்பபாக தன்போக்கில் தொடரும்போது அதன் திசையும் விசையும் மாறுவதில்லை.அது தடைகளை சந்திக்கும் போதுதான் அது வினை மாற்றம் அடைகின்றது.அதன் வலிமையும் கூடுகின்றது.அவ்வாறுதான் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஏற்படும் நட்பும். அது தன் நடப்பில் நட்பாக தொடரும் வரை சலனமின்றித்தான் போய்க்கொண்டிருக்கும்.
அதற்குத் தடைகளும் இடர்களும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் போதுதான் அது தன் நட்பு எனும் காய் நிலையிலிருந்து காதல் எனும் கனி நிலைக்கு முதிரத்.துடிக்கிறது.எவ்வாறு ஒரு கூட்டுப்புழு தன் கூட்டுக்குள்ளே வளர்ந்து முற்றியபோது கூட்டைக் கிழித்துக்கொண்டு அழகிய வண்ணங்களையுடைய சிங்காரச்சிறகுகளால் வண்ணத்துப் பூச்சியாக பறக்க முயல்கிறதோ அதுபோலத்தான் காதலும் தன் தடைகளைத்தாண்டி வெளிப்படுகிறது.
கமலாவின் பருவத்தோடு காவலும் வளர்ந்தது.காவலின் பலம் அதிகமாக அதிகமாக எங்களின் காதலும் வலிமை கூடிக் காவலையும் மீறத் துடித்தது.ஆச்சி எங்களை கவனிக்கும் வேலையையே பிரதானமாகக் கொண்டிருந்தாள்.என் நிழல் கூட அவள் வீட்டு முற்றத்தில் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்து காவல் காத்து வந்தாள்.பொல்லாத ஆச்சி அவள் பகல் பொழுதெல்லாம் வீட்டு வாசல்படியில்தான் உடாகார்ந்துக்கிட்டு பக்கத்து வீட்டுக்கிழவியையும் பேச்சுத்துணைக்குக் கூட்டி வைத்துக்கொண்டு வெற்றிலையை சுவைதுத்க்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள்.நான் ஏதாவது சாக்குச்சொல்லி வீட்டுக்குள் நுழையலாம் என்று முயற்ச்சிப்பேன்.ஆனால் ஆச்சியின் அந்த பலமான காவலைத் தாண்டி என்னால் நுழைய முடியாதபடி வாசலை முழுமையாக அடைத்துக்கொள்வாள்.
ஆச்சி வருடம் தவறாமல் ஏகாதேசிக்கு விழித்திருப்பது வழக்கம்.என்னைத்தான் மகா பாரதம் வாசிக்கக் கூப்பிடுவாள்.இந்த வருடம் என்னைக்கூப்பிடவில்லை.
நானும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள மறக்கவில்லை.வழக்கம்போல் ஆச்சி வாசலில்தான் உக்காந்திருந்தாள்.நானும் அலையாத விருந்தாளியைப்போல் வலியக்கட்டி போய் நின்றேன். .என்னை உக்காரென்று ஒரு பேச்சுக்குக் கூட சொல்ல வில்லை. சொல்லாட்டி என்ன நானே சப்புன்னு உக்காந்து
“என்ன ஆச்சி இன்னிக்கு ஏகாதேசி.மகாபாரதம் படிக்கலாமா?எப்போ ஆரம்பிக்கலாம்?நாங் குளிச்சிக்கிளிச்சி ரெடியா வந்துட்டேன்''என்று சொல்லி நானும் வாசல் படியில் உக்காந்துக்கிட்டு ஆச்சியோட பேச ஆர்ம்பிச்சுட்டேன்.
ஆச்சி விடுவாளா என்ன!”இல்ல இன்னிக்கு கமலாவே படிப்பா” எனச் சொல்லி என்னைத் தட்டிக்தழிக்க திட்டமிட்டாள் ஆச்சி. அதேவேளை உள்ளிருந்து கமலாவின் கண்சிமிட்டுவது போன்று ஆலங்கமுடன் குரல்.
""ஆச்சி இன்னிக்கு எனக்கு கத படிக்கத் தோதில்ல.அவனே படிக்கட்டும்”
எனக் கமலாவே எனக்கு வாய்ப்பத்து எனது இருப்பை அவள் மறைமுகமாக ஆதரித்த அந்த சரியான தருணத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
“என்ன ஆச்சி வருசமெல்லாம் நாந்தான படிக்கிறேன்.பாவம் கமலா அது என்னைக்கிப் படிச்சிச்சி.இதோ புஸ்தகம் கொண்டுட்டே வந்துட்டேங் ஆச்சி “ன்னு சொல்லிக்கிட்டே கதய படிக்க ஆரம்பிச்சிட்டேங்.   
கொ.பெ.பி.அய்யா.

     



Monday, 10 February 2014

கரிசல் காவியம்10

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1௦
அத்தியாயம் 1௦
பாவம் பால்வினை புரியாதவன்.

ராசாவின் தாயார்: ஒரு உறவு தொலைந்தால் அது மீண்டும் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்ற உண்மையை அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.

அக்கம் பக்கம் உறவுகள் அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருந்தாள்.நேற்றுவரை தாயாய்ப் பிள்ளையாய் பழகிவிட்டு இன்று ஒருவற்கு ஒருவர் பகையாளிகளாய் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கக் கூச்சப்படும் நிலை எவ்வளவு மோசமானது.அதனால் மனதுக்குள் ஏற்படும் வலி என்ன என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.
இப்படியொரு நேரக்கூடாத நிகழ்வு எப்படி நேர்ந்தது என்பதற்கான காரணம் தேட ஆரம்பித்தாள்.

மகனைப் பார்க்கிறாள்.
அவனும் ஒரு பக்கம் வாடி வதங்கி இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டதுபோல் இடிந்து போய் சோகமே சொந்தமெனஉட்கார்ந்
திருந்தான்.

மெதுவாகத் தாய் அவன்பக்கம் நகர்கிறாள்.அவனுடைய சோர்ந்து போன முகத்தைப் பார்க்கிறாள்.தாயின் பார்வை அவனுக்குப்புரிகிறது,
அம்மாவைப் போலவே அவனும் தான் உணர்ந்து
கொள்ள அவனுடைய கண்கள் அவளிடம் விடை தேடி அழுகிறது.
அப்படியே அவனைப் பெற்றவள் அவனுக்கு ஆறுதலாக அவனைத் தன் மார்போடு அள்ளி அணைத்துக்கொண்டு நடந்தது என்ன என்பதை விசாரிக்கத் தொடங்குகிறாள்
“ டேய் ராசாக்கண்ணு என்னடா இதெல்லாம் ஏண்டா இப்படி.அவர்கள் மிகவும் நல்லவர்கள்தானே!இவ்வளவு கோபம் வரும்படி என்னடா நடந்தது.இதற்குமுன் அவர்கள் யாரும் இப்படி நடந்து கொண்டது இல்லையடா .அவர்கள் நம்மை விட உசந்தவர்கள்தான்.ஆனாலும் அவர்கள் அதைக் காட்டிக்கொண்டது இல்லையடா.அவர்களுக்கும் நமக்கும் பகை ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லையடா.சொந்தக்காரங்க கூட நம்மீது அவர்களைப்போல் உதவியாகவும் துணையாகவும் இருந்ததுஇல்லையடா.

இவ்வளவு பிரச்சனை ஏற்பட என்னடா ஆச்சு?ஏண்டா இப்படி?நீ ஏதாவது தப்பா நடந்துக்கிட்டியாய்யா?சொல்லுயா!” எனக் கவலை தோய்ந்த குரலில் கண்ணீர் மல்கக் கேட்டாள்,இதைக் கேட்ட ராசா என்ன பதில் சொல்வான் பாவம்!அவன் தன்தாயைக்கட்டி அணைதுக்கொண்டுக் கதறினான்.
”அம்மா!நான் எந்தத் தப்பும் செய்யலியே!அந்த ஆச்சிதான் முன்னைப்போல இல்லம்மா!இப்பொழுதெல்லாம் அந்த ஆச்சி என்னைவீட்டிற் குள்ளேயேசேர்ப்பதில்லை.
என்னை ஏதோ ஒரு வேண்டாதவனைப்போல் வெறுக்கிறாள்.அது ஏன்னுதான் எனக்குப் புரியலம்மா!”என உலகம் புரியாதவனாய்ப் பதிலுரைத்தான்.
“டேய் கண்ணா நாந்தாங் அன்னிக்கே வடசொன்னேல்ல.
கமலா வயசுக்குவந்துட்டா.
இனிமே அவங்க வீட்டுக்கு முன்ன மாதிரி அடிக்கடி போகக்கூடாது அப்படின்னு சொன்னேல்ல.அப்புறம் ஏண்டா நீ அங்க போன .அப்பத் தப்பு உம்மேலத்தான்.அதான் ஆச்சிக்கு வேற வழி தெரியாம சண்டய இழுத்துருக்கா.
ஏண்டா சட்ட இப்படிப்பண்ணுன.
டேய் யாரைப் பகைச்சிக் கிட்டாலும் பக்கத்து வீட்டுக் காரங்களப் பகைக்கக்
கூடாதுடா!

அப்படிப் பகைச்சிக்கிட்டா அப்புறம் கால் பட்டாலும் குத்தம் கை பட்டாலும் குத்தமுன்னுஎதுக்கெடுத்
தாலும் சண்ட வந்துக்கிட்டே இருக்கும்டா!அம்மா சொன்னாப் புரிஞ்சுக்
குனுமுடா!இப்பப் பாத்தியா எவ்வளவு பெரிய சண்ட.நீ அவ்வளவு பெரிய கல்லத் தூக்கிப்போட்டியே அது அந்த ஆச்சி மேல விழுந்திருந்தா பாவம் அந்தக் கிழவி செத்துருக்குமடா! அந்தக் கிழவிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா அப்புறம் ஒங்கதி என்னடா!கொஞ்சமாச்சும் நீ யோசிசசுப் பாத்தியா!

முட்டாப்பயல நீ படிச்சவன்தான இப்படிபண்ணலாமா?இதுக்குத்தானா நாங் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிறேன்.”என ஆழ்ந்த கவலையோடு அழுத கண்ணீரோடு ஆதங்கச்சொற்களை உதிர்த்தாள் அவன் தாயார்.

அந்த ஆச்சி மட்டும் அப்படிப் பேசலாமா?உன்னயப்பத்த்தித் தப்புத் தப்பா அவ பேசினா என்னால பொறுத்துக்க முடியுமா?அதாங் எனக்குக் கோவம் வந்துருச்சு.ஆத்திரம் தாங்கல.அவசரப்பட்டுட்டேங்.
அப்பக்கூட அந்தக் கல்ல அவ மேல போடணுமுன்னு போடல.கல்ல எடுக்கும்போது வேகமாத்தாங் எடுத்த்தேங். ஆனா போடணுமுன்னு நினைக்கும்போது பயம் வந்துருச்சு.எடுத்த கல்ல எப்படியும் கீழ போட்டுத்தான ஆகணும் போட்டுட்டேங்.கீழ விழுந்த கல்லு எப்படியோ உருண்டு கிழவி காலுல பட்ட்ருச்சு..அவ்வளவுதாங்.
நாங் போடணுமுன்னு நினைச்சுப் போட்டிருந்தா அந்தக் கிழவி அப்பவே செத்துப் பொணமா ஆயிருக்காது.என குழந்தைத்தனமான பதிலை சொன்னான்.
“வாய மூடுறா மடயா!செய்யுறதையும் செஞ்சுப்புட்டு வியாக்யாணாமா பேசுற வியாக்யாணம்.இன்னிக்கு இவ்வளவு தூரம் ஆயிப்போச்சே இன்னும் எப்படிறா அவங்க கூட முகம் குடுத்துப் பேசுறது.டேய் நாங் ஒண்ணு கேக்குறேங் நீ மறைக்காமச் வளசொல்லணும்.
அந்தப் புள்ளயிட்டப் போயி அது இதுண்ணு ஏதாவது தப்புத்தண்டாப் பேசினயா?சொல்லுடா!”என நளினமாக விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா அவட்ட இன்னிக்குன்னு நாங் புதுசாவா பேசுறேங்.
நாங்க சின்னப் புள்ளையில இருந்தே அப்படிதானம்மா பழகுறோம்.இப்பமட்டும் அது ஏங் தப்பாப்போச்சு.?என விவரம் புரியாமல் கேட்டான்.
“அய்யோ உனக்கு எப்படிச்சொல்லிப் புரிய வக்கிறதுன்னு தெரியலயே!இப்படி வாழ மட்டையா இருக்கயே!டேய் அவ அப்போ சின்னப்பொண்ணு இப்ப அவ பெரிய மனிசி ஆயிட்டா. அதனால ஆம்பளப் பயக கூட அவ பேசக்கூடாது.அப்படி பேசினா அது தப்பு.அவளஒரு மாப்பள பாத்துக் கட்டிக் குடுக்குற வரைக்கும் அப்படித்தாங் அவள பாதுகாப்பா வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோடா.””எனப் புத்திமதி சொன்னாள்.
போம்மா அவளுக்கும் எனக்கும் ஒரே வயசுதான அப்புறம் அவ மட்டும் என்னயவிட எப்படிப் பெரிய மனிசியா ஆயிட்டா?.”என விளங்கிக்கொள்ள முடியாத வயதில் விவரம் இல்லாமல் கேட்டான்.
“அடப்பாவிப் பயலே!சரி!நீ ஆச்சி மேல எதுக்குக் கல்லத்தூக்கிபோட்ட!”
“அவ உன்னத் தப்புத் தப்பாப் பேசினா அதாங் போட்டேங்”
“அது மட்டும் தப்புண்ணு தெரியுதுல்ல`இதுவும் அப்படிதாண்டா தப்பு.நீ கமலாவோட பேசிப் பழகிக்கிட்டு இருந்தா நாளைக்கு அவளயும் இப்படித் தப்பாத்தாண்டா பேசும் .
இந்த ஊரு என விளக்கம் கூறிக்கொண்டே கதறினாள் அந்த உலகம் அறிந்த தாய்.
(தொடரும்)


    கொ.பெ.பிச்சையா..

Wednesday, 5 February 2014

ஊருக்கு ஒரு சகுனி.

ஊருக்கு ஒரு சகுனி.!

ஊருக்குப் பெரியவர்,உத்தம புருசர்,நாட்டாமைஅறக்கட்டளை தர்மகர்த்தா;
அத்தனைக்கும் பொறுப்பானவர்-அனைத்துக்கும் தகுதியானவர்தான.
நல்லவரைக் கண்டாலே வில்லனுக்குப் பிடிக்காதே.ஊரைக் கெடுக்கத்தான்
ஒருவன் இருப்பானே.

எவரும் நல்லவர் என்று பேரெடுத்தாலே அவனுக்கு ஆகாதே.

இவரை எப்படிக் கவிழ்க்கலாம் எனப் பலவாறாகப் பல வருடங்ககளாகவே
யோசித்தான்.

பழக்கமென்றால் பழக்கம்........அப்படி ஒரு பழக்கம். அவன் பேச்சோ!
அப்பப்பா !........................!திருநெல்வேலி அல்வாக்கூட அப்படி இனிக்காது.

இனிக்க இனிக்கப் பேசியே எப்பேர் பெற்றவரையும் கவிழ்த்து விடுவான்.
அப்படி ஒரு கில்லாடித்தனம்.அவனுக்கு.

ஒரு நாள்..............அது சித்திரை மாதம் அக்கினி நட்சத்திர வெய்யில்
நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.பாவம் ஊர் நாட்டாமை .........
வெப்பம் தாள முடியாமல் வியர்த்து ஊற்றிட ஆலமர நிழலில் வந்து
அப்பாட ...............ன்னு ஆயாசத்துடன் அமர்ந்தார்.

வந்தான் அந்த சகுனி."அட்டட்டா எப்படி வேரக்கிறது பார்த்தீரா
அப்பப்பா என்ன வெயில்!--இந்தக் குளிர்பானத்தைக் குடியும்.ஆயாசம் நீங்கி தெளிச்சியா ஆயிருவீர்"
எனஅக்கறையோடு வக்கனையாகக் கொடுத்தான் .

அவரும் இவனை நம்பிக் கட கட வென அன்னாக்கஊற்றிக்குடித்து
விட்டுச் சொன்னார்,
"ஆகா இப்படி ஒரு பானத்தை......நான் இதுவரைக் குடிச்சது இல்லையே.
ருசி......... இது ஒரு மாதிரி இருக்கே..........
தூக்கம் வார மாதிரி கண்ண அசத்துதே...........கொஞ்சம் தலையசாச்சுக்கிடட்டுமா?"
எனத் தடு மாறிய குரலில் அவனிடம் அனுமதி கேட்டார்..

அதற்கு அவன்;"அய்யய்யோ உடனே உறங்கக் கூடாது.இதக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க,அப்புறம் பாருங்க எப்படி இந்த உலகம் சுத்துமுன்னு." 

எனக் கூறிக் கொண்டே வறுத்த கருவாடு ஒன்றை அவர் வாயிலே திணித்தான்.சுத்த சைவமான அவரை இந்தப் பாவி அந்த நிமிடமே அசைவமாக மாற்றிவிட்டான்.அந்த அளவிற்கு அவருடைய புத்தியை எது கெடுத்தது.அவருக்கு எதை ஊற்றிக்கொடுத்து கெடுத்தான்.பாவம்!போதை என்றால் என்னவென்றே அறியாத அவரை குளிர்பானம் என ஏமாற்றி 
சாராயத்தில் கலர் பானம் ஒன்றைக் கலந்து கொடுத்துவிட்டான்.
இப்போது உள்ள நிலையில் அவரைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்றே 
அவருக்குப் புரியாத அளவிற்கு அவருடைய அறிவு மயங்கி இருந்தது.
அந்தச்சண்டாளன் கட்டளைப்படி இயங்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொண்டார்.சேரக்கூடாதவரோடு சேர்ந்தால் இதுதான் கதி.இதை விதி எனக் கூறி விளக்கம் கூறினால் சமூகம் ஒப்புக்கொள்ளது.

குடி குடியைக் கெடுக்கும் என்பதும் உண்மைதானே!
   


"சரி இப்போது வீட்டுக்குப் போகலாமா" எனக் கேட்டு ஒரு சிரிப்பு சிரித்தான்.அந்த சிரிப்புக்கு எத்தனையோ அர்த்தங்கள்.
நீயா இந்த ஊருக்குப் பெரிய மனிதன்.உன்னைப் பார்த்தால் நான் கையெடுத்துக் கும்பிட வேண்டுமா?இப்பப் பாரு ஊரே உன்னைக் கை கொட்டிச்சிரிக்க வைக்கிறேன்"என மனதில் விசத்தை வைத்துக்கொண்டு 
ஒரு பெண்ணை வரவழைத்தான்.அவளும் அவனுடைய ஆள்.அவன்
அழைத்தவுடன் ஈ...எனப் பல்லை இழித்துக் கொண்டு வந்தாள்.
பிறர் மனை நோக்கா பேராண்மைக் காரரான அந்தப் பெரிய மனிதனை 
அறிவிழக்கச்செய்தான்.

என்ன செய்கிறோம் என்று அறியாமல்---- கொஞ்சமும் மனங்கூசாமல்
அவளுடைய தோளில் தொங்கிக் கொண்டுதெருவீதி வழியே இழுபட்ட நடையில் ஊராரெல்லாம் வேடிக்கை பார்க்கும் படிஉளறிக் கொண்டே ஊர் வலம் சென்றார்.

இந்த அற்புதக் காட்சியை ஊரே வேடிக்கையாகவும் வினோதமாகவும்
பாரத்துப் பாரத்துக் கைகொட்டிச் சிரித்தது.

"சீச்சீ இவனா பெரிய மனிதன்...........................இவ்வளவு கேவலமாகப் போனானே............."
என ஒருமையில் திட்டடித் தீர்த்தனர்`

கவுரவம், பதவிவி, பட்டம் அவை எல்லாமே ஒரே நாளில்காணாமல் போய்விட்டதே..................குடியினாலே..........................

ஒரு நாள் குடித்தாலென்ன ................. பல நாள் குடித்தாலென்ன!.................
அது முக்கியமே அல்ல..
அவர் தெரிந்து குடித்தாரா..................... தெரியாமல் குடித்தாரா...............!
அதைப்பற்றி யெல்லாம்........ யாரும் ஆராயமாட்டார்கள்...............

எவ்வளவு சிறப்போடு வாழ்ந்தவர் ஒரே நாளில் குடியினால் பாவம்  கெட்டவராகிவிட்டார்..அதனால்.அவர் பெற்ற பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் உரியதகுதியை அவர் இழந்து விட்டார்.அவ்வளவுதான்.

குடி இப்படியும் ஒரு குடியைக் கெடுத்துவிடும்.
நல்லாரைத் தேர்ந்தே சேரவேண்டும்.
ஊருக்கு ஒரு சகுனி இருப்பான்.

கொ.பெ.பி.அய்யா.




கரிசல் காவகயம் 9

கரிசல் மண்ணில் ஒரு காவியம்  9
அத்தியாயம்-9

பெண் விடுதலை

கிழவி மருத்துவ மனையில் கிடந்தாலும் அவள் விதைத்த கன்னி வெடிகள் ராஜாவை கமலாவின் வீட்டை நெருங்க முடியாமல் அச்சுறுத்தியது.ஒட்ட முடியாத அளவில் அந்த இரு வீட்டின் பழக்க வழக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கமலா ராஜாவுக்காக ஒரு பாட்டுப் பாடுவாளே அந்தப் பாட்டு ஒலி கேட்டுப் பல நாட்களாகின.
கமலாவின் பாட்டு ஒலி வெளிவரும் அந்த சன்னல் கதவுகள்மூடப்பட்டிருந்தன.
முன் வாசல்க் கதவும் சாத்தப்பட்டிருந்தது.கமலாவின் ஒரு மெல்லிய குரல் ஒலி கூட வீட்டைவிட்டு வெளியில் கசியவில்லை.ராஜா பித்துப் பிடித்தவன் போல் சன்னல்க் கதவு திறக்காதா எனக்காத் திருந்தான்.
வீட்டைச் சுற்றி அமைதியான சூழல் நிலவியது.இந்த உலகமே சூன்யமாகிவிட்டதோ என்ற பயம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
அப்போதுகூட கமலாவின் நிலை என்னவோ என்பதே அவன் கவலையாக இருந்தது.அவன் கவலை சரியாகத்தான் இருந்தது.கமலாவுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள்.அவள் எந்த ஒரு காரணம் தேடியும் ராஜாவைப் பார்க்கவோ பேசவோ கூடாது என்பது கண்டிப்பான தடை உத்தரவு.அப்படி மீறும்போது அவள் அவளுடைய தாய்மாமன் வீட்டிற்கு அனுப்பபடுவாள் எனவும் அவளை மிரட்டி வைத்தனர்.தாய்மாமன்தான் அவளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை.அதற்காகவே அவளை பொத்திப் பொத்தி அவளுடைய ஆசைகளையும் கனவுகளையும் அர்த்தமில்லாமல் அடக்கிச் சிதைத்து வைத்தனர்.இது மனித இனதிற்குச் செய்யும் அநியாயம், அக்கிரமம், பாவம் என்றுதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பதுதான் வேதனையில் வேதனை.பெண்விடுதலை பற்றிப் பேசியும் போராடியும் வந்த பாரதியும் பெரியாரும் தோற்றார்களா வென்றார்களா நிச்சயமாகக் கூறத் தெரிய வில்லை.ஆம் இதோ அந்த சுயமரியாதைப் பகலவன் சொன்னதை அப்படியே இங்கே துணிச்சலாகச் சொல்கிறேன்.கேளுங்கள்.” பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியா தென்று கருதி ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று நாம் ஆராய்வோமே யானால் பெண்கள் வெறும் பிள்ளை  பெறும் எந்திரமாகக் கருதப் படும்  இயற்கைத் தொல்லை ஒன்று இருப்பதால் தான் என்னவோ தாங்கள் ஆண்துணை இல்லாமல் வாழ முடியும் என்பதற்கு எதிராக தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளைப் பெறும் இயற்கைக் கட்டாயத்தால் தங்களுக்கு ஆண் துணை அவசியம் இருப்பதால்  ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் இயற்கையின் ஏற்பாட்டை எவர் என்ன செய்ய இயலும்.அதற்காக இயற்கை ஏற்பாட்டுக்கு மாறாக எதைச் செய்தாலும் இயற்கையின் இயல்பு நிலைக்கு எதிர்வினை ஆற்றுவது விபரீத விளைவாகி விடும். என்றே ஐயப்படலாம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனம் என்பதாகச் சமூகம் வசை பாடும் . உலகம் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லி வன்மையாக கண்டிக்கும். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள்,
மற்றும் ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை உடன் இணைந்து வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாக எதைச் சாதித்துவிடக் கூடும்? அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது என்பது அருவருப்பாகும்.
அது தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானுடம் வர்க்கம் அழிந்தும் போகும்.அப்புறம் ஆண் பெண் படைப்பின் அவசியம் என்ன?
எனவே இப்படியெல்லாம் யோசிப்பதை பெண்குலமே ஏற்றுக்கொள்ளாது. என்னதான்  விஞ்ஞானம் பல விந்தைகள் படைத்து இருந்தாலும் இப்படி ஒரு கருத்து அபத்தமான அஞ்ஞானமாகும் என அஞ்சி விலகிப் போகிறது.
பெண்ணடிமைத் தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்வதில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலைக் கொண்டு பேசுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக்காரனா யிருப்பத னாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.
பெண்களின் முழுமையான விடுதலைக்குப் பெண்களே தனக்குள்ள சக்தியை உணர வேண்டும்.போராடத் துணிந்து ஒன்று கூட வேண்டும்.ஒரே குரலில் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும்.அப்போதவர்கள் பாரதியையும் பெரியாரையும் தங்களுக்குள் உயிர்த் துடிப்பாக உள் வாங்கிக்கொண்டு தாமே முன்னேற வேண்டும், 
(தொடரும்)
கொ.பெ..பி.அய்யா.ரர





கரிசல் காவியம் 8

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.—8
அத்தியாயம்-8
எதிர் பாராதவிதமாக திடு திப்பென்று ஒருவர் தன் சட்டையைப் பிடித்து உலுக்கியவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான் ராஜா.
“டேய் கேக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சியா!உனக்கு என்னடா அவ்வளவு துணிச்சல்”எனப் பேசிக்கொண்டே அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.அதோடு விடவில்லை அவனைக் காலால் உதைத்துக் கீழே சாய்த்து முரட்டுத்தனமாக மாறி மாறி அடித்தான்.இதைக்கண்ட ராஜாவின் தாயார் அவன் மேலே விழும் அடிகளை தடுக்க முயன்று கதறி அழுதுகொண்டே அவனுக்கு விழும் அடிகளை அவளே வாங்கினாள்.இந்தக் கொடுமையை பார்த்த ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.
நடந்த பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லாமல் உள்ளே புகுந்து அடாவடிசெய்த அந்த வில்லனை நடந்த நிகழ்வுகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நடுநிலைக்கூட்டம் அவனை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து விலக்கிவிட்டனர்.அவன்தான் ஏழுவழியான் ஏழுமலை.ஊருக்கு ஒரு சகுனி இருப்பான் என்று சொல்வார்கள் அல்லவா,அவன்தான் இவன்.ஊருக்குள் குழப்பம் விளைவித்து ஊர் மக்களை காவல் நிலையத்திற்கு அலைய விட்டு வீண் செலவு செய்ய வைத்து அதிலே வயிறு வளர்க்கும் வம்புக்காரன் இவன்.கிராமப் பஞ்சாயத்து தேர்தல் வந்தாலே இவனுக்கு நல்லவேட்டைதான்.
கிராமத்தில் போட்டி இல்லாமல் ஒரு நல்லவரை பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என கிராமம் முடிவெடுத்தாலும் இவன் அதற்கு உடன்பட மாட்டான்.எவனையாவது ஒரு ஏமாந்தவனை உசுப்பேற்றி போட்டியை உருவாக்கி அந்த அப்பாவியை கடனாளியாய் ஆக்கிவிடுவான்.
ஆகவே இந்த ஏழுவழியானைக் கண்டாலே ஊரில் பெரும் பாலான மக்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.அதனால்தான் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அன்று ஆத்திரம் தீர அடித்துத் துவைத்துப் பிழிந்து விட்டனர்.ஊரே ஒன்று கூடிவிட்டதைக்கண்ட அவன் துண்டைக்காணோம் துணியைக்காணோம் எனத் தப்பித்து ஓட்டம் பிடித்து விட்டான்.இதுதான் கிராமத்துக்கும் நகரத்துக்கும் உள்ள வேறுபாடு.நகரத்தில்அக்கம் பக்கம் வீட்டார்என்றுகூட அண்டிப் பழகமாட்டார்கள். ஐக் அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் எந்திரத்தனமான வாழ்க்கை வாழ்வார்கள்.பாசம் பரிவு நேசம் என்ற புரிதல் இல்லாத சலனமற்ற மனிதர் என்ற மனிதராய் வாழ்வார்கள்.
ஆனால் கிராமம் இதற்கு நேர்மாறாய் இருக்கும்.கிராமத்தின் பரப்பும் கூட்டமும் குறுகி இருக்கும்.ஆனால் மனது விசாலமாய் இருக்கும்.
ஒருவருக் கொருவர் அந்நியோன்யமாய் ஒரு குடும்ப உணர்வாய் ஒரே பந்தமாய் பழகியும் உதவியும் புரிதலோடுவாழ்வார்கள்.
எந்தப் பக்கம் நியாயம் இருக்குமோ அந்தப்பக்கம் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து நிற்பார்கள்.அதாவது அந்தக்கிராமம் ஒரு குட்டி சாம்ராஜ்யம் என்றும் கூறலாம்.அந்தக்கிராமத்தில் என்ன பிரச்சனைகள் நிகழ்ந்தாலும் அவ்வளவு எளிதில் காவல் நிலையம்வரை போகாது.
அந்த அளவிற்கு கிராமத்தினர் பஞ்சாயத்துத் தலைவருக்கு மதிப்பும் அளித்து வந்தனர்.
ராஜாவும் ஒரு நல்ல பையன்.எந்த வம்பு தும்புக்கும் தலையிடமாட்டான்.தன் கல்வியில் மட்டுமே கவனமாக இருப்பான்.அதனால் கிராமத்தார் அவன் மீது ஒரு அலாதி அன்பு வைத்திருந்தனர்.
அவனுடைய அம்மாவும் ஊரோடு ஒன்றி வாழ்ந்து வந்தாள்.அந்த ஊரில் யார் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முதல் ஆளாய் நின்று இறுதிவரை எல்லாப் பணிகளையும் உதவியாகச்செய்வாள்.
ஆகவே அவளைப்பற்றி 
யார் என்ன சொன்னாலும் ஊர் நம்பாது.அப்படித்தான் அன்றும் ஊர் அவள் பக்கம் நின்றது.அன்று அந்தகிழவியின் அபாண்டமான பேச்சு அவளை மட்டுமல்ல ஊரையே காயப்படுத்திவிட்டது.இளம் வயதில் விதவையானாலும் தன் மகனுக்காக தன் சுய சுக துக்கங்களை எண்ணாது தன் மகனின் எதிர் காலமே லட்சியம் எனக் கொண்டு ஒரு சத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.அதனால் அந்த ஊர் அவளுக்கு பக்க பலமாக இருந்தது.
கமாலாவின் ஆச்சியை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துணையாக கிராமத்துத் தலைவரும் உடன் சென்றார்.(தொடரும்)
குறிப்பு:இனி அடுத்தும் வரும் தொடர்கள் ஒருநாள் விட்டு மறுநாள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.என்பதை நேயர்களின் கவனத்திற்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொ.பெ.பிச்சையா.