Friday, 14 March 2025

கரிசல் காவியம்18

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 18

அத்தியாயம் 18

“ஏண்டா வேல வெட்டிக்குப் போக வேண்டாமா?பள்ளிக்கூடம் போற நேரத்துல அங்க என்ன பண்ணுற”தாயாரின் அவசரம் அவளுக்கு.
“இல்லம்மா ..அது வந்து......இதோ வந்துட்டேங் அம்மா.......நாங் கெளம்பிட்டேங்ம்மா” ஓடி வருகிறான் ராஜா.
“என்னடா கெளம்பிட்ட சாப்புட வேண்டாமா வா சட்டுப்புட்டுன்னு சாப்புட்டுட்டு நீ கெளம்புனாத்தான நாங் ஏங் வேலயப்பாத்து போகமுடியும்.வா சாப்புடு”அவசரமாக அழைத்த தாய் அவனுக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறாள்.ராஜா வேக வேகமாக சாப்புடுகிறான்.

“ஏண்டா இப்படி அவக்குத் தொவக்குன்னு அவசரமா அள்ளிப்போடுற விக்கிக்கிடப் போவுது,தண்ணியக்குடி”என மகன் சாப்பிடுவதை பார்த்து தன் பசி தீர்ப்பவளாய் அவன் உண்ணும் ஒவ்வொரு கவளமும் தன் வயிறில் நிறம்புவதாய் திருப்தி அடைகிறது பெற்ற வயிறு,
“நீ சாப்புடலயாம்மா?”எனத் தாயாரின் பாச முகத்தில் அவள் தன் பசியை மறந்திருப்பதை உணர்ந்து நினைவூட்டுகிறான்.

மகனின் அக்கறையான விசாரிப்பு அவள் பசியை முற்றிலுமாக ஆற்றிவிடுகிறது.ஏழையின் குடிசையில் எவராவது ஒருவர் பசியை தியாகம் செய்யத்தானே வேண்டும்.அந்தத் தியாகத்தின் சொரூபம் பெரும்பாலும் தாயாகத்தான் இருக்கும்.இவளும் அந்தத் தாய்தான்.பசி ஏழைக்குப் பழகிப்போனதுதானே.பசி பாசத்தின் முன் ஏழையின் வாழ்வில் ஒன்றும் பெரிய விசயமும் இல்லை.ஆச்சரியமும் இல்லை.அன்றாட அனுபவம்தானே!

தன் பிள்ளையின் பசி ஆறிய முகத்தை பூரண திருப்தியோடு பார்க்கிறாள் ஏழைத்தாய்.
“ஏம்மா என்னயே பாக்குறே....என்னம்மா”பரிவோடு கேட்கிறான்.
“நாங் உன்னயத்தானடா பாத்து சந்தோசப்பட முடியும்.எனக்கு இந்த உலகத்தில வேற என்னடா சந்தோசம் இருக்குது.நீதானடா ஏங் உசுரு.உனக்காகத்தான இந்த உசுரு இன்னும் கெடக்குது.”எனத் தன் கண்களைத் துடைக்கிறாள் தாய்.
“அம்மா நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா.ஓங் கஷ்டத்த எல்லாம் நாங் தீத்து வப்பேம்மா.நீயும் சாப்புடும்மா”என சோத்துப் பானையின் சோகம் புரியாமல் மழலை உதிர்த்தான்.
இருப்பு நிலைமை என்னவென்று அறிந்திருந்த அன்னை தன் பிள்ளையின் பாசம் கேட்ட ஆனந்தத்தில் மென்மையாகப் புன்னகைத்து “சரியா நீ போயிட்டு வா”மகனை வழியனுப்பி ஆறுதலடைந்தாள்.

ராசாவும் பைக்கூடைத் தன் தோளில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
“போயிட்டு வாரேம்மா.”அன்புடன் விடை பெறுகிறான்.
சரி ராசா எனக் கூறி வழி அனுப்பும்போது,”டேய் ராசா”
“என்னம்மா”ஆவலோடு கேட்கிறான்.

“வேறொண்ணுமில்ல......இன்னிக்கு கமலாவும் பள்ளிக்கூடம் வாராளாமே”
“ஆமாம்மா நல்ல விசயம்தானே”என தன் மகிழ்ச்சியைப் பகிர்கிறான்.
பொம்பளப்புள்ள படிக்கபோறது நல்லதுதாண்டா.அதனாலதாங் சொல்றேங் அவ தொடந்து படிக்க வரணும்முல்ல.......”என ஏதோ ஒரு இரகசியத்தை உள்ளே வைத்து சொல்ல வருகிறாள் தாய்.

“ஆமாம்மா அதுல என்ன சந்தேகம் இருக்கு”என ஆவலோடு வினவினான்.
“சந்தேகம் இல்லடா சந்தோசந்தாங்.அதனாலதாங் உனக்குச்சொல்றெங்.நீ அவட்ட அதிகமாப் பேசுறதயோ பழகுறதயோ கொஞ்சம் கொறச்சுக்கனும்.ரொம்பக் கவனமா இருக்கணும்.அப்படி இல்லையிண்ணு வச்சுக்கோ அப்பொறம் அதயே சாக்கா வச்சு அவளப் படிக்கபோறது போதுமுன்னு நிறுத்திருவாங்க தெரிஞ்சுக்கோ...என்னடா அம்மா சொல்றது புரியுதா”என பக்குவமாக தன் மகனுக்குப் பாடம் சொல்கிறாள் உலகம் உணர்ந்த அனுபவ அன்னை.

“சரிம்மா.....புரியுதம்மா...நாங் வாரேம்மா.”பள்ளிக்கு இன்று புத்துணர்வோடு போகிறான்.அதேபோல் கமலாவின் வீட்டிலும் கமலாவுக்குப் புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்ப்கின்றனர் அவள் தாயும் தந்தையும்.

இருண்ட வானில் மின்னல்கள் பெண்ணின் விடுதலை கண்டு ஆனந்தம் கொண்டு கைகொட்டிப் பளிச்சிடும் சிரிப்பொளிகளை வாழ்த்துப் பாடல்களாக வானெங்கும் பரப்பி முழக்குகின்றன.பூச்சூடி பொட்டிட்டு புதுப்பொலிவுடன் புறப்படுகிறாள் பள்ளிக்குக் கமலா.இன்று வையமெங்கும் திருவிழாப்போல் வானமே மங்களம் இசைக்கிறது.வாழ்த்துகின்றது.

(தொடரும்)         .

கொ.பெ.பி.அய்யா.
  .  


Wednesday, 26 February 2025

கரிசல் மண்16


கரிசல் மண்ணில் ஒரு காவியம்

அத்தியாயம் 16

ஆசிரியர் சமயோசிதமாக இடம் பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வியை நறுக்குன்னு வைத்தார்.இவர் போட்ட கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்ட கமலாவின் அப்பாத் தன் தாயாரின் முகத்தைப்பார்த்து,”இதற்கு நான் என்னம்மா பதில் சொல்வது”என்பது போல் ஆதங்கமாய் விழித்தார்.தன் தாயாரின் எதிர்வினை இதற்கு எப்படி இருக்குமோ! எனும் அச்சமும் அவர் முகத்தில் இழையோடியது.தலைமை ஆசிரியர் கமலாவின் தந்தையார் என்னசொல்லுவார் எனவும் ஆர்வத்தோடு அவர் கண்களின் பரிதவிப்பைக் கண்டு எதிர்கொண்டு காத்திருந்தார்..

உடனே கமலாவின் தந்தை சுதாரித்துக்கொண்டு ஆசிரியரின் கேள்வியைப் புரிந்து கொண்டவராய்க் காட்டிக்கொண்டு.நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதட்டிலேயே சிரித்து “அடடே இவரிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே.பாதகமான பதில் சொன்னால் நமது பகல் வேசம் பல்லிளித்துவிடுமே”எனத் தன் மனதில் தனக்குள்ளே எண்ணிக்கொண்டு
“அய்யா நீங்க என்ன கேக்க வாரீங்கன்னு எனக்கு நல்லாவே புரியிது..கமலாவை ஏங் பள்ளிக்கு இன்னும் அனுப்பாம வச்சுரிக்கீகன்னுதான கேக்குறீக. சமூகச் சமநிலைச் சித்தாந்தவாதிகளான பெரியார் பாரதியார் மற்றும் வள்ளலாரைப் பற்றி புரிந்துவைத்துள்ள இவர் ஏன் இப்படிப் பிற்போக்கு வாதியா இருக்குறாரேன்னு என்னுடைய கொள்கைய நீங்க சந்தேகப்பட்டுக் கேக்குறீகன்னு எனக்குப் புரிஞ்சிருச்சு.”எனும் அப்பெரியவரின் மறுமொழி கேட்ட தலைமை ஆசிரியர் ,”ஆமா அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்களேன்”

எனத்”தனது தெளிவான கண்ணொளியில் மௌனமான சிரிப்போடு ஆமோதித்தார்.

‘”பள்ளிக்கு அனுப்பத்தான் இருக்கிறோம் அய்யா அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு”என அமைதியாகக் கூறி ஆசிரியரின் வெற்றி முத்தைப்பார்த்துப் புன்னகைக்கிறார் கமலாவின் அப்பா.இந்த சொற்கள் ஆசிரியரின் செவிகளில் ஆயிரம் குடங்கள் தேன்நிரப்பிக் கொட்டியதுபோல் இனித்தது.அவர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கலிங்கத்துப்போரில் வென்ற அசோகரைப்போல் ஆனந்தம் கொண்ட அதே வேளையில் தோற்றுத் தலை தாழ்ந்த கமலாவின் ஆச்சி முகம் கண்டும் தன் வெற்றியை அமைதியாக சுவைத்துக்கொண்டு அப்பெரியவரின் கைகளைப் பற்றி ,”மிக்க நன்றி அய்யா”எனக்கூறி தன் கண்களில் ஆனந்தக்கண்ணீரை உதிர்க்கும் முன் தன் கைத்துணியால் அவசரமாகத் துடைத்துக்கொண்டார்..

ஆனால் அப்போது ஆச்சியின் முகத்தில் கடுகு வெடிக்கும் எரிச்சல்கொடூரமாக இருந்தது.அதையும் ஆசிரியர் கவனிக்கிறார்.ஆனால் ஆச்சியின் முயற்சிகள் இனி பலிக்காது எனத தெளிவடைந்தார்.இருந்தாலும் உறுதி செய்துகொள்ளும் விதத்தில் எப்போது அனுப்பலாம் என்று எண்ணுகிறீர்கள்"எனக்கேட்டார்

“வரும் திங்கள் கிழமை அனுப்பி வைக்கிறேன்.இப்போ உங்களுக்கு திருப்தியா:"என மீண்டும் இனிப்பைத் தந்தார். “மிக்க மகிழ்ச்சி அய்யா.அப்போ நான் வரட்டுங்களா?......சரி.கமலாவிடம் கூற வேண்டுமே!....கமலா”!என வெற்றிசங்கம் முழங்குவதுபோல் ஆனந்த் தொணியில் அழைத்தார்.
கமலா மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு மடை உடைத்துத் துள்ளிப் பாய்ந்து வருவது போல் குடுகுடுவென ஓடோடி வந்து தன் தலைமை ஆசிரியரின் கால்களில் விழுந்து நன்றிக் காணிக்கை யாக ஆனந்தக் கண்ணீர்த் துளி முத்துக்களைக் கொட்டி அர்ச்சிக்கிறாள்..உடனே ஆசிரியர் தன் இருகரங்களாலும் அவளை அன்பால் அரவணைத்துத் தூக்கி அவள் கண்களில் வழியும் நன்றிக் கண்ணீர்த் துளிகளைத் தன் விரல்களால் தட்டிவிட்டு ஆசிர்வதிக்கிறார்.

“இப்போ உனக்கு சந்தோசம்தானே.இன்னும் இரண்டே இரண்டு தினங்கள்தான்.திங்கள் கிழமை முதல் மீண்டு என் வகுப்பறையில் நீ அமர்ந்து கலகலக்ச்செய்யப்போகிறாய்..சரி நான் வரட்டுமா?’"என கங்கை கொண்ட சோழனாய் வெற்றிக் களிப்பில் பெருமிதத்தோடு வந்த வினை முடித்து நகர்ந்தார்.அப்போது தன் இரு கைகளைக் கூப்பி வணங்கி மறுவாழ்வு வாழ வைத்த வள்ளலை வாழ்த்தி நின்றாள்.

ஆசிரியர் எப்போது வெளியே செல்வார் எனக் காத்துக் கொண்டிருந்த ஆச்சி தன் ஆட்டத்தைத் துவங்கினாள்.

“பொட்டப்புள்ளைக்கு எதுக்குப் படிப்பு,மண்ணாங்கட்டி.இவ என்னப் படிச்சுக் கலக்டர் வேலைக்கா போகப்போறா?.
அடுப்பு ஊதப்போற கழுதைக்கு இம்புட்டுப்படிச்சது போதாதாக்கும்.அதெல்லாம் பள்ளிக்கூடம் ஒண்ணும் போனதும் போதும் போதும்”எனத் தன் வசனத்தைப் பேசித் தீர்த்தாள்.


இதுவரை அமைதியாகப் பொறுமையோடு பொறுத்திருந்த கமலா இப்போது பொங்கி எழுந்தாள்.ஏய்க் கெழவி! என்ன ஓவராப் பேசுற!படிப்பப் பத்தி உனக்கு என்னத் தெரியும்? படிப்புங்குறது என்னோட சொந்த வாழ்க்கைப் பிரச்சன.அது வேணுமா வேண்டாமான்னு நான்தான் முடிவு எடுக்கணும்.உன்னோட முடிவு எனக்குத் தேவ இல்ல புரிஞ்சுதா?இன்னுமே என்னோட வாழ்க்கையில வெளயாண்ட! அப்புறம் நாங் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது.ஜாக்கிரத.”எனத் தன் உணர்வுகளைக் கொட்டிக் குமுறினாள் கமலா.

“என்னடி பெரியவங்கள மரியாத இல்லாமப் பேசுற. இந்த வீட்ல நாந்தாங் பெரிய மனுசி.அதனால நாங் என்ன நெனக்கிறேனோ அதாங் நடக்கும்.”என தன் வழக்கமான பழைமை மடமையில் பேசினாள் ஆச்சி.
“என்னது பெரிய மனுசியா?யாரு! நீ பெரிய மன்சியா?நல்லது செஞ்சா நீ பெரிய மனுசி!.ஆனா நீ நயவஞ்சகி.என்னோட எதிகாலத்தக் கெடுக்க நெனக்கிற மோசக்காரி நீ பெரிய மனுசியா?பெரிய் மனுசின்னா புள்ளங்கள படிக்க வச்சு அழகு பாக்கணும்.ஆனா நீ என்னப் படிக்கவிடாமக் கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கப் பாக்குற சண்டாளி நீ!ய !நீ யெல்லாம் நல்ல சாவே சாக மாட்ட. புழுத்துப் புண்ணாகி நாறி நாத்தமெடுத்துச் செத்து நரகத்துக்குத்தான் போவப் பாவி நீ!இது உன்னொடப் பழைய பைத்தியக்காரக் காலமுன்னு எண்ணாத!இது பாரதி, பாரதிதாசன், பெரியார்கள் கண்ட புதுஉலகம்.
எங்களுக்கும் அவங்க எப்படிப் பேசனுமுன்னு சொல்லிக் குடுத்துருக்காங்க.இன்னுமே எல்லாம் பொண்ணுங்களப் பூட்டி வச்சி அடிமையாக்கனுமுன்னு நெனச்சா அது நடக்காது..
பொம்பளைங்களும் உசுருள்ள ஜீவன்கள்தான்.

அவங்களுக்கும்.உசுரு இருக்கு உணர்வுஇருக்கு.அவங்களுக்கும் சுயமா சிந்திக்குற அறிவு இருக்கு.பொம்பளைங்கன்னா அடுப்புலகிடந்து சாவுரதுக்கும்.கோலம் போடுறதுக்கும்,புள்ளயப்பெத்துக்குடுக்குறதுக்கும் மாத்திரமுன்னு நெனைக்காத.அது உன்னோட அந்தக் காலம்.இந்தக்காலம் பொம்பளைங்க ராக்கெட்டுல பறக்குற காலம்..துப்பாக்கி எடுத்து எல்லையில நின்னு உன்ன மாதிரி எதிரிங்களோட சண்ட செஞ்சிச்சுட்டுத் தள்ளுறக் காலம்.ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையும் பொம்பளைங்களும் செய்வாங்க புரிஞ்சதா?இன்னுமே ஏதாவது இப்படி முட்டாத்தனமா பேசுனே நானே கல்லத் தூக்கிப்போட்டுக். கொன்னுருவேங் ஜாக்கிரத.”என ஆவேசமாகக் கொந்தளித்தாள் கமலா.


“ஓகோ அப்படின்னா அந்தப் பயலுக்குக் கல்லத்தூக்கிப் போடச்சொல்லி நீதாங் சொல்லிக்குடுதையா?”என பேச்சை திசை மாற்றினாள் ஆச்சி.
அதுவரை தன் மகளின் அறிவார்த்தமான பெண்ணுணர்வின் எழுச்சி முழக்கங்களை வியப்போடு ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்த தந்தை தன் மகளைப்பற்றித் தவறாகப் பேசும் தாயே ஆனாலும் பொறுத்துக் கொள்ள முடியாதவராய் அவசரமாகக் குறுக்கிட்டு “அம்மா! என்ன நீ பேசுற!பொம்பளப் புள்ளைக்கிட்ட என்னப் பேசுறேன்னுபுரிஞ்சுதான் பேசுறயா!பெரியமனிசி பேசுற பேச்சா இது!”எனத்தன் தாய்க்கு எதிராக நியாயமான திசையில் பேசத் துவங்கினார்.
“ஏண்டா அவ இவ்வளவு நேரமும் என்ன பேச்சுப் பேசுனா.அப்பெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்துட்டு இப்பக் கொந்தளிக்கிற.அவள நீ ஒரு வார்த்தையாவது கண்டிச்சியா?”எனத் தன் மகனைத் துணைக்கிழுக்கும் முயற்சியில் இறங்கினாள் கெழவி.அவ தப்பா எதுவும் பேசலயே.அவ பாதிக்கபட்டவா அவளுக்கு வேகம் இருக்கத்தாங் செய்யும்.நீ இன்னும் பழைய காலத்தயே இறுக்கிப் புடிச்சித் தொங்கிக்கிட்டு இருகுற! அதெல்லாம் இப்போ எடு படாதும்மா. அவபடிக்கணுமுன்னு நெனக்கிறா.அத நெனச்சி நாமப் பெருமைப்படணும். இப்போக் காலம் ரொம்ப மாறிப்போச்சும்மா.அதனால ஓங்க்காலத்த மாதிரி இன்னும் நினைக்கக்கூடாதும்மா.

புள்ளைங்க என்ன ஆசப்படுதோ அத நிறவேத்தி வைக்கிறதுதாங் பெரியவங்க கடமை.அத ஏங் நீ புரிஞ்சிக்காம அடம் புடிக்கிற..உனக்கு வயசு ஆயிப்போச்சு.ஓங் காலமும் முடிஞ்சி போச்சு..அவங்க வாழ வேண்டிய வயசு.அதனால அவங்க வாழ்க்கையைப்பத்தி அவங்க கவலைப்ப்டுறதுக்கு அவங்களுக்கும் பொறுப்பு இருக்கு உரிமை இருக்கும்மா.

அவ படிக்கணுமுன்னு சொல்றவட்ட நாம வேண்டாமுன்னு எப்படி சொல்லமுடியும்.இது அவ வாழ்க்கைப் பிரச்சன அதுல நாம ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும்தான் தலையிட முடியும்.நாம அதையும் தாண்டி தலையிட்டா அப்புறம் நமக்குத்தான் மரியாத இருக்காது.ஏன்னா இப்போல்லாம் அவங்களுக்கு நால்லாவே அறிவுபூர்வமா யோசிக்கத்தெரியுது.அத நாமதான் புரிஞ்சிக்கணும். அவங்க அவங்க எதிர் காலத்தப்பத்தி அவங்க அவங்களுக்கு அக்கறை இருக்குதுநாயம்தானம்மா

அவபடிக்கப்போகட்டும்.

வீணாத் தடுத்துக் கடைசிக் காலத்துலப் பாவப்பழியச் சுமக்காத.உனக்கு ஆசையா என்ன வேணுமோ அத மாத்திரம்என்கிட்டக்கேளு

அதுல ஏதாவது குறை இருந்தாமட்டும் எங்கிட்டச் சொல்லு. காலம் போற போக்க புரிஞ்சு நடந்துக்கோ”எனத் தாயைச்சமாதானப்படுத்தி மகளைத் தன் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு,”.இனி நீதானம்மா எங்களுக்கு எல்லாம். நாங்க வாழ்றதே உனக்காகத் தானம்மா.ஆச்சி சொன்னதையெல்லாம் மனசுலவச்சுக்காத..போ..ஆமா சாப்புட்டயாம்மா நீ ........ஏம்மா சுப்பு கமலா சாபட்டாளா?எனக் கேட்கிறார் சாமிநாதன்.


இதுவரை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த கமலாவின் தாயார் சுப்பு இப்போதுதான்.நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறாள்..கமலாவின் கல்விப்பயணம் தொடர்வதில் அவளுக்கும் மகிழ்ச்சிதான்..அவள் மகிழ்ச்சி பொங்கிய உற்சாகமான குரலில் “கமலா!வாம்மா!வா!சாப்புடு.வா வா.சாப்பிட்டுட்டு ஓங் யூனிபாம் ட்ரெஸ் எல்லாம் துவைக்கன்னுமுல்ல`வா..வா.!
(தொடரும்)
கொ.பெ.பிச்சையா.

கரிசல் மண்ணில் ஒரு காவியம்1

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.

அத்தியாயம்--1

பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை.
வேறு யாரையும் விளையாட்டுக்குச் சேர்ப்பது இல்லை.வேறு யாரும் எங்களையும் சேர்ப்பது இல்லை.ஏனெனில் எனக்காக அவளும் அவளுக்காக நானும் எவரிடமும் விட்டுக் கொடுப்பது இல்லை.

பக்கத்துப் பக்கத்து வீடு.நானும் என் அம்மாவும்தான்.என் அம்மா விடிந்து வேலைக்குப் போனால் அடைந்துதான் வீடு திரும்புவாள்.தினமும் கம்மஞ் சோறுதான்.பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு கஞ்சியாய்க் கரைத்துக் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். என் ஏழ்மை புரிந்து கொண்ட அவள் எனக்காக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொண்டு வந்து தருவாள்.

“ஏன் கரைத்துக் குடிக்கிறாய் துவையல் தொட்டுச்சாப்பிட வேண்டியதுதானே”
எனச்செல்லமாகக் கூறி நான் சாப்பிடுவதை பரிதாபமாக் பார்த்துக் கொண்டே இருப்பாள் .அவள் ஓரளவுக்கு வசதியானவள்தான். அவள் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு காலை மாலை இட்லி தோசைதான்.என் வீட்டில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் தோசை,இட்லி.நெல்லுச்சோறு எல்லாம்..அதனால் நான் சாப்பிடும் இந்தக் கம்மஞ் சோறு அவளுக்கு ஆசையாக இருக்கும்போலும்.
“டேய் எனக்கும் கொஞ்சம் தாயேண்டா”
எனக் கேட்பாள்.நானும் மறுக்காமல்
“இந்தா நீயும் கொஞ்சம் குடி”
என்று ஒரு அலுமினியத் தம்ளரில் ஊற்றிக் கொடுப்பேன்.அப்போது அவள் ரசித்துக் குடிப்பதை பார்த்து நான் ஆனந்தம் அடைவேன்.

அவள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் எனக்குக் கொடுக்காமல் அவள் சாப்பிட மாட்டாள்.அவளுடைய அம்மா நல்லவர்தான்.அவளுடைய ஆச்சிதான் சிடுமூஞ்சி.என்னோடு அவள் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாலே அவளுடைய ஆச்சி முனுமுனுப்பாள்`பள்ளிக்குப் போனாலும் வந்தாலும் சேர்ந்தே போவோம் சேர்ந்தே வருவோம்.அதைக்கண்டு எங்கள்வயதிலுள்ளவர்கள்.எங்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டி எனவும்
கேலி பேசுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை.சில நேரங்களில் கேலி கிண்டல் அதிகமாகும் போதுஅவள் அழுவாள் .அப்போது சக மாணவர்களோடு நான் சண்டை கட்டுவதும் உண்டு.அடிபடுவதும் உண்டு.ஆனால் அந்த அடியும் வலியும் அவள் தடவிக்கொடுக்கும்பொழுது காணாமல் போய்விடும்.ஒரு நாள் ஆசிரியர் நான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று என்னை அடித்து விட்டார்.அந்த வலியை நான் தாங்கிக் கொண்டேன் .ஆனால் அவளால் என்வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.அப்படியொரு இனம் புரியாத பாசம்.

தினமும் இரவுப் பாடம் படிக்க அவளுடைய வீட்டுக்குத்தான் பையை தோளில் போட்டுக்கொண்டு போவேன்.என் பாடங்களை எல்லாம் அவள்தான் எழுதிக்கொடுப்பாள்.அந்த நாளில் மின்சாரம் என்றால் நகரங்களில்தான் காணமுடியும்.கிராமங்களில் மண்ணெண்ணை விளக்குத்தான்.ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அதைச்சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு படிப்போம்.போதாத வெளிச்சம்தான்.குனிந்துகொண்டு மிகவும் உற்றுக்கவனிதுதான் பாடங்களைப் படிக்கவேண்டும்.தெருவிளக்குகள் நிலாக் காலம் மட்டும்தான்.மற்ற நாட்களில் வான் நட்சத்திரங்கள் மட்டுமே மங்கலான ஓரளவுக்கு உருவம் புரியும் அளவுக்கு மெல்லிய இருளாக இருக்கும்.எனக்கு இருள் என்றால் அப்போதே பயம்.அதனால் அவள்தான் என்னை வீடுவரை துணைக்கு வந்து உதவுவாள்.

வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டு தோளில் புத்தகப்பையை தூக்கிப் போட்டுக்கொண்டு அவள் எனக்காகக் காத்திருப்பாள் என அவசர அவசரமாக வீட்டைவிட்டு வந்தேன்.எனக்குப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமே என்ற அக்கறையைவிட அவளோடு சேர்ந்து போவதில்தான் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த துடிப்பு.இது எனக்கு அப்போது புரியவில்லை.இப்போது அதை எண்ணிப்பார்க்கும்போது அது பாலியல் ஈர்ப்புதான் எனப்புரிகிறது.எனக்கு ஆண் மாணவ நண்பர்களே இல்லை.அதை நான் விரும்பவும் இல்லை .
எனக்கு எல்லாமே அவள்தான் எனும் ஒரு பற்று.அவளைக்காணாமல் என்னால் தனியே பொழுதைத் தள்ள இயலாது எனும் நிலை.அவள் ஒரு நாள் ஊரில் இல்லை என்றால்கூட அவள் வீட்டின் முன்ப்பாக உள்ள அந்த முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டு அவளோடு அதைச்சுற்றிச்சுற்றி அவளோடு விளையாடுவதுபோல் விளையாடிக்கொண்டு அவள் வீட்டு வாசலிலேயே கிடப்பேன்..இப்படியொரு பந்தம் எப்படி என நான் சிந்திக்கவும் பக்குவப்படவில்லை.அப்படியொரு முயற்சி எனக்குள் தோன்றவும் இல்லை.அது எல்லாமே அனிச்சைச் செயலாகத்தான் இருந்துள்ளது.

பள்ளிக்குச்செல்வதற்காக வேகமாக அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குள் அவள் பெயரைச்சொல்லி அழைத்துக்கொண்டு நுழைய முயன்றேன்.அவளுடைய ஆச்சி வாசலில் நின்றுகொண்டு
“டேய் எங்கடா போற “என அவசரமாகத் தடுத்து---
“அவள் இனிமேல் உன்னோடு வரமாட்டாள்”நீ போடா”என என்னை விரட்டுவதுபோல் அதட்டினாள்.
நானும் புரியாதவனாய்
“ஏன் ஆச்சி அவளுக்கு காய்ச்சலா”என் வினவினேன்.
அதற்கு ஆச்சி –
“ஆமாம் அப்படித்தான்.....நீ போடா!”என என்னை விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்`
அதற்குள் என் அம்மா பின்னாலயே வேகமாக வந்து
“டேய் ராசா அவள் வரமாட்டாள்.இன்னுமே நீ மட்டுந்தான் தனியா பள்ளிக்கூடம் போகணும்.”
எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து அழைத்துப்போனாள் .
நானும் விடவில்லை மாறி மாறி என் அம்மாவிடம் கேட்டேன்
“ஏம்மா......ஏம்மா வரமாட்டாள் ,அவளுக்கு என்னம்மா,.....சொல்லும்மா .....சொல்லும்மா “
புரிந்து கொள்ளாத வயதில் அம்மா என்ன சொல்லுவாள்.!
“டேய் ,,நீ..சின்னப் பையன் ,உனக்கு இதெல்லாம் புரியாது. சொன்னாக் கேளு !
அம்மா சொல்ரேன்ல்ல.நீ மட்டும் போ ராசா” என என்னைச்சமாதானபடுத்தி அனுப்பிவைத்தாள்`
அப்புறம் அவள் என்னைப் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.எப்படி என்னை மறந்தாளோ
நினைந்தாளோ தெரியவில்லை.

கொ.பெ.பி.அய்யா.

(தொடரும்.)

Saturday, 22 February 2025

கரிசல் மண்ணில் ஒரு காவியம். அத்தியாயம் 15


கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 15

அத்தியாயம். 15

தலைமை ஆசிரிரியர் கமலா வீட்டிற்குள் வருகை தருகிறார்.கமாலாவின் தந்தை உரிய மரியாதையுடன் இரு கைகூப்பி வணங்கி வணக்கம் கூறி நாற்காலியில் அமர வேண்டுகிறார்.
“அய்யா வணக்கம்! வாருங்கள்.உட்காருங்கள்!.ஏம்மா கமலா உங்க சார் வந்திருக்கார் பாரு.அப்படியே அய்யாவுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா!.”இந்த வார்த்தைகைகளைக் கேட்டவுடன் கமலாவுக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகிறது என்பது போன்று பூரிப்பு.அவளுக்குள் ஏற்படுகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

“இதோ வாரேம்ப்பா!.என குடுகுடுவென ஓடுகிறாள் அலமாரியிலுள்ள புத்தம் புதிய பளபளக்கும் டம்லரைத்தேடி எடுக்கிறாள்.இருக்கிற பளபளப்பு போதாதென்று மேலும்மேலும் அதை நன்றாக துலக்கி சுத்தமாகக் குளிர்ந்த தெளிந்த நீரை முதலில் கொண்டு வரும்போதே மிகவும் பவ்வியமாக “வணக்கம் சார்”!எனும் வணக்கம் கூறும் மொழியில் "என்னை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுங்கள்"எனக் கெஞ்சுவது போல் தன்னுடைய உள்ளுணர்வை அந்த ஒற்றைச்சொல்லில் மௌனமாக வெளிப்படுத்தினாள்.ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் கற்றவர்கள்.அந்த ஏக்கமான மௌனமொழியைப்பற்றிப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ன!.கமாலாவிடமிருந்து அந்தத் தண்ணீரை வாங்கும்போது”கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறேன் “என ஆறுதல் சொல்வது போன்று “ம்ம்ம்ம்.எப்படிம்மா இருக்க! கமலா!நல்லா இருக்கியா?என்றார். அந்த அன்பான மொழி அவள் செவிகளைத் தொட்டத் தருணத்தில் கமலாவின் விழிகளில் பனித்துளிகள் போன்று சில நீர்த் துளிகள் துளிர்த்து மீள்கின்றன.சில சொட்டுக்கள் தரையில் பொட்டென உதிர்கின்றன.

கமலாவின் மனக்கவலையைப் புரிந்து கொண்டவராய் ,"சரிம்மா நீ உள்ளே போ நான் ஆச்சியைப்பற்றி அப்பாவிடம் விசாரிக்க வேண்டும்”எனக் கூறி “கவலைப்படாதே!நல்லதே நடக்கும் “எனக் கண்சாடை செய்கிறார் பண்புள்ள தலைமை ஆசிரிரியர்.கமலா உள்ளே நகர்கிறாள்.
“சரி சார் ஆச்சி எப்படி இருக்குறாங்க.பூரணமாக் குணமாயிட்டாங்களா?என ஆசிரியர் தன் பேச்சைத் சாதுர்யமாகத் துவக்கினார்.
.
“பரவாயில்லை அய்யா.ஒண்ணும் பிரச்சனை இல்ல நல்லா சுகமாயிட்டாங்க..ஏதோ கடவுள் புண்ணியத்தில முழுசா குணமாகி வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க..அய்யா! ஏங் வீடு தேடி வந்து விசாரிக்கிறது என்னுடைய பாக்கியம் அய்யா! “என மீண்டும் நன்றி கூறும் விதமாகக் கைகூப்பி வணங்கினார்.

“ஆச்சியைப் பாக்குற சாக்குல அப்படியே கமலாவையும் பாத்துக்கிட்டுப் போகலாமே!ஒரே கல்லுல ரெண்டு மாங்கா எப்படி?’எனும் நகைச்சுவையோடு பேச்சை லாவகமாக நகர்த்தினார்.

இருவரும் கொள்ளென மனம் விட்டுச்சிரித்தனர் “கமலா எம்பொண்ணு மாதிரியாச்சே.

அதுமாத்திரமல்ல அவா நல்லாப் படிக்கிற பொண்ணு.கமலா மேல எனக்குத்தனி அக்கறையுண்டு.அவள எப்போப் பாப்போம்ன்னு இருந்தது.இப்போ ஆச்சியால அந்தவாய்ப்புக்கிடைச்சது.

விடுவேனா என்ன? இதுதான் நல்ல வாய்ப்புன்னு நினச்சேன் உடனே கெளம்பி வந்துட்டேன்.எப்படி சார்?”என நளினமாகப் பேசி கமலாவின் தந்தையின் எதிர் வினையைக் கவனிக்கிறார் தலைமை ஆசிரியர். அப்போது கமலாவின் தந்தையின் முகத்தில் ஈ ஆடவில்லை.

அவருக்குள் ஏதோவொரு குற்ற உணர்வு அவரது முகப்பொலிவு மாறுவது ஆசிரியர்க்குப் புரிகிறது.அவருக்கு நம்பிக்கையும் வருகிறது.இந்தப் பழம் கனியும் என்றும் புரிகிறது.

மேலும் தான் குறி வைக்கும் இலக்கிற்கு எவ்விதம் காயை லாவகமாக நகர்த்தலாம் என்பதற்கும் அந்த வீட்டுக்குள்ளேயே தந்திரம் தேடி சுவர்களைச்சுற்றும் முற்றும் பார்க்கிறார்.சுவரிலே வள்ளலார் படமும்,பாரதியார் படமும் கூடவே காமராஜரும் பெரியாரும் சேர்ந்து உரையாடுவது போன்ற படங்களும் ஆசிரியரின் கண்களுக்கு கலங்கரை விளக்கங்களாகக் காட்சியளிப்பதோடு நன்னம்பிக்கை முனைகளாகவும் ஆசிரியர்க்கு வழிகாட்டிகளாவும் அப்படங்களில் உள்ள மகாத்மாக்கள் பிரகாசித்தார்கள்.அப்போது நல்லது நடக்கும் என்றும்.பெண்விடுதலையைப் பற்றிப் பேசவும் வந்த அந்த நல்ல உள்ளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாமா?அவர் எண்ணி வந்த வேலை எவ்வளவு சுலபமாகப் போகிறது என்பதை எண்ணித் துள்ளிய அவருடைய அந்த அன்பு மனம் எந்த அளவில் நம்பிக்கையோடு ஆனந்தக்கூத்தாடி களித்திருக்கும் என்பதை எண்ணி எண்ணி நாமும் அவரோடு களிநடனம் ஆடி மகிழ்வோமா? ,

சரி களிநடனம் ஆடிக்கொண்டாடியது போதும் கதைக்கு வருவோம்.இப்போது மறு மலர்ச்சி பெற்றவராய் புத்துணர்வு பெற்ற புதுப்பொலிவுடன் அவர் நம்பிக்கை பெற்றார் என்பதை அவருடைய முகம் ஆயிரம் ஒளி சக்தி பெற்ற மின்விளக்காய் சொலித்தது.அப்போது அவர் பேச்சை மிகவும் மென்மையாக இதமாக கனிவாக மேலும் ஒரு புதிய கோணத்தில் திருப்புகிறார்.அப்போதுதான் அவர் கற்ற உளவியல் அவருக்குக் கைகொடுக்கிறது.
“சார் இந்தப்படங்களில் உள்ளவர்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ!”என மல்லிகை அவில்வதுபோன்று சொற்களைத் தன் அழகானப் பாணியில் இனிக்கும் விதமாகக் கேட்கிறார்.

அவரும் புன்சிரிப்போடு”ஆமாம் அய்யா அவர்கள்.அத்தனை பேருமே.என் மனதுக்கு மிகவும் பிடித்தவர்கள்..சுருங்கச்சொன்னால் நான் அவர்களின் தாசன்”என்றார்.


“உண்மையில் உங்கள நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையா இருக்கு.நீங்க எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பெரிய மனுசர் என்பது இந்தப் படங்களைப் பார்க்கும் போதே என்னால புரிஞ்சிக்கிட முடியிது.ஆகா எப்பேர்ப்பட்ட மகான்கள் இவர்கள்.இவர்கள் படங்களாக அல்ல நமக்குப் பாடங்களாக விளங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.”எனப்புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென அவரைப்பார்த்து ஒரு கேள்வியைப் போட்டார்.

“தங்களைப் பார்த்தால் பார்வைக்கு பக்திப்பழமாகத் தெரிகிறீர்கள்..............எனப் பேச்சை முடிக்கத் தயங்கி இழுத்தார்.ஆசிரியர்.

இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்ட கமலாவின் தந்தை.”அய்யா நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு எனக்குத் தெளிவாகவே புரியுது.பெரியார எப்படிப் புடிக்கும் முண்ணுதான கேக்க வர்றீங்க?

ஆமோதிப்பதுபோல் தலைமை ஆசிரியர் இதமாகத் தலை அசைத்தார்.

“பொதுவாக சிலர் அப்படித்தான் சொல்றாங்க,பெரியார் ஒரு நாத்திகர் அவரை எப்படி ஆத்திகர்கள் நேசிக்க முடியும்முன்னு.அவர்கள் அவரை புரிந்து கொண்டவிதம்.அவ்வளவுதான்.அவரைப் பற்றி யாரும் இன்னமும் சரியான விளக்கம் தர முயற்சிக்கவில்லை என்பதே என்னுடைய ஆதங்கம்.என்னைப்பொறுத்தவரை நாத்திகம் என்பது ஆத்திகத்திற்கு எதிரான ஒன்றல்ல.ஒரு மார்க்கத்தை சீர் படுத்த முயன்ற ஒரு புதிய மார்க்கம்தான் நாத்திகம் என்பதே என்னுடைய வாதம்.ஆரம்பக் காலத்தில் இத்தனை மதங்கள் இருந்தனவா?இல்லையே!ஒன்றை சீர் செய்ய மற்றொன்றாகத் தோன்றியவைகள்தான் இன்று இத்தனை மதங்களும்.அப்படித்தான்இதுவும். இந்து மதச் சீர்திருத்தவாதிகளாக ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்.யூத மதத்தின் மறு மலர்ச்சியாக கிறித்தவம்.அதில் ஏசுபிரான் மற்றும் சீசர்கள்.இஸ்லாமில் சூபிக்கள் எல்லோருமே!.அப்படியானால் இவர்கள் எல்லாம் நாத்திகவாதிகளா?அதனால்தான் சொல்றேன்.பெரியாரும் ஒரு சீர்திருத்தவதின்னு ஏங் ஒப்புக்கொள்ள மறுக்கிறாங்கன்னுதான் எனக்கு வெளங்கல்ல.
பெரியார் என்ன சொல்றார்.மக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்படுறதச்சொல்லுங்க மத்தது தேவை இல்லாம எதுக்குண்ணு கேக்குறாரு இது தப்பா?.பாரதியார் வள்ளலார் போன்றோரெல்லாம் என்ன சொன்னாக உண்மை எதுவோ அதைப்போற்றுங்கள்.மெய்யை மாத்திரம் வழிபடுங்கள்.நிசம் எதுவோ அதை நம்புங்கள்.யாரும் யாருக்கும் எஜமானர் அல்ல.அனைவரையும் சமமாகக் காணுங்கள்.மடமைகளை விட்டொழியுங்கள்.

அப்படித்தான அவங்க சொன்னாங்க. .அதையேதான இவரும் சொன்னாரு.இதுல இன்னொரு வித்தியாசம் என்னன்னா அவங்க பாட்டாப்பாடிக் கொஞ்சம் பதமாச் சொன்னாங்க.இவரு கொஞ்சம் கோவக்காரரு வெடுக்குன்னு வெள்ளையா புரியும்படியா கொஞ்சம் கடுமையாச் சாடிட்டாரு.எதுக்கு அந்தக்கோவம்?.அவுரு வீட்டுக்கு அரிசி அறிக்கலயின்னா?எல்லாம் நாமஎல்லாம் நல்லா சுயமரியாதையோட வாழணும்னுதான அப்படிச்சொன்னாரு.ஒரு பழமொழி சொல்லுவாங்களே! எதுக்கோ எதோடயோ கோவிச்சிட்டுப்போற மாதிரின்னு.அப்படிகோவிச்சுக்கிட்டா யாருக்குநட்டம்?அய்யா ரொம்பப் படிச்சவுக உங்ககிட்ட நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாப் பேசிட்டனோ!”பௌவியமாக இறங்கிக் கொண்டார் கமலாவின் தந்தை.

“அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச் சொல்லி இருக்கீங்க.உண்மையாச் சொல்றேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..

உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க.ன்னு அவரை பாராட்டிவிட்டு தன் இலக்கைத் தொடுகிறார் தலைமை ஆசிரியர்.
“சார் பெண் கல்வியைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
(தொடரும்)
கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (3-Mar-14, 5:38 pm)
பார்வை : 212
 
 75 (3.8)
கருத்து சேர்க்க Login செய்யவும்
user photo

வெள்ளூர் ராஜா • 20-Mar-2014 8:40 am

அப்பப்பா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையாச்சொல்லி இருக்கீங்க.உண்மையாச்சொல்ரேன்.எனக்கே சிலவிசயங்கள் இன்னைக்குத்தான் புரிஞ்சது.எவ்வளவு உண்மைகளைப் புரிஞ்சி வச்சிருக்கீங்க..உண்மையிலேயே நான் அசந்து போயிட்டேன் போங்க
----------------------------------------------------- மிக மிக சரியான பார்வை ஐயா..இத்தனை நாள் இதப் படிக்காமல் விட்டு விட்டேனே...!

முன்பு படித்த ஒரு வரி நினைவுக்கு வருகிறது:

"பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என்பதோடு நின்று விடுகிறது இப்போதெல்லாம்;"

ஹா ஹா அருமை அருமை அய்யா



ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

குமரிப்பையன் • 04-Mar-2014 4:28 pm

பெண்களின் கைகள் கட்டுப்பட்டு கிடக்கிறதை சிம்பாலிக்கா சொல்லி இருப்பது நன்று..!
அப்புறம் கமலாவின் அப்பாவிடம் சீக்கிரம் பேசி அவள் படிப்பு தொடர அனுமதி வாங்க சொல்லுங்க.! ஏன்னா.. சாப்பிட நேரமாச்சா...ஆச்சி எழும்பி வந்துற போவுது..!

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

ஜெய ராஜரெத்தினம் • 04-Mar-2014 10:35 am

ம் ம் அருமை தொடருங்கள் ஐயா !

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

saro • 04-Mar-2014 8:31 am

கரிசல் மண்
விரிசல் இல்லாமல்
விவேகத்தில் அடிவைத்து புயல்
வேகத்தில் சுற்றுகிறது ! அடுத்த
பாகத்தில் என்ன என்று !
வேகத்தில் வரட்டும் !
அருமை !

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

வே புனிதா வேளாங்கண்ணி • 04-Mar-2014 8:17 am

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
கருத்து மிக்க கதையாக தொடர்கிறது மிகவும் அருமை அய்யா தொடருங்கள் அய்யா நாங்களும் தொடர்கிறோம் ....

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

Shyamala Rajasekar • 03-Mar-2014 6:57 pm

கதையோடு நில்லாமல் நல்ல கருத்துக்களை கதைப் பாத்திரம் மூலம் கொடுக்கும் பாங்கு சிறப்பு ...!! வாசித்து சில மணித்துளிகள் கரிசல்
மண்ணில் வசித்துவிட்டு வந்தேன் ...!! அருமை அண்ணா ...!!

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

பழனி குமார் • 03-Mar-2014 6:29 pm

முதலில் என் பாராட்டுக்கள் , நீங்கள் பதிவு செய்துள்ள இந்த அத்தியாயத்தின் முகப்புக்கு . பதிந்துள்ள பொருளுக்கு ஏற்ப , சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ப , அழகு மிகு படம். அழகு என்று நான் சொலவது , எண்ணத்தின் எதிரொலியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதை சொல்கிறேன்.
தாங்கள் தொடரை எடுத்து சொல்லும் பாங்கும் , பண்பும், வார்த்தைகளின் கோர்வையும் மிக அருமை ஐயா .
கமலாவின் தந்தையாக வரும் பாத்திரத்தை உருவாக்கியதும் , அவர் மூலம் " சுயமரியாதை சுடர் , பகுத்தறிவு பகலவன் , தந்தை பெரியார் பற்றியும் , அவரின் நாத்திக கொள்கையின் விளக்கத்தையும் மிக தெளிவாக உணரவைத்த உங்கள் எழுத்துக்களுக்கு என் வணக்கம் ஐயா.
நன்கு செல்கிறது தொடரும் ...
தொடரட்டும் ... காத்திருக்கிறோம் நாங்களும் வாசிக்க .

ReplyVote UpVote Down0 வாக்குகள்
user photo

myimamdeen • 03-Mar-2014 6:12 pm

அடுத்து வருவதில்

என்ன நினைச்சிருக்காங்கன்னு பாக்கலாம் .

அருமை அய்யா .
ஒரு நாளும் ஓயாமல்
பகலோனாய் நீங்கள் தரும் ஒளியில்
இருலாவிதில்லை ஒரு நாளும் இந்த "கரிசல் மண்ணில் ஒரு காவியம்"

மிக்க அருமை ...

ReplyVote UpVote Down0 வாக்குகள்

மேலே

Tuesday, 11 February 2025

கரிசல் காவியம் 14

கரிசல் மண்ணில் ஒரு காவியம்14

அத்தியாயம்14

கமலாவின் வீடு இன்று அமைதியாக இருந்தது,ஆச்சி இல்லாத வீட்டில் ஒரு பேச்சுப் பேசவும் ஆள் இல்லை.இன்று அந்த மௌனம் கலைகிறது.ஆம்!ஆச்சிக்கு பரிபூரணமாகக் குணமாகிவிட்டது.இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறாள்.அவளை ஆராத்தி எடுத்து வரவேற்க ஏற்பாடுகள் சத்தமில்லாமல் வேண்டா விருப்பாக கமலாவால் ஏனோதானோவென தயாராகின்றன.

“இவளுக்கு இது ஒண்ணுதான் கேடு”எனத் தாம்பூலத் தட்டை டமாலெனப் போட்டு தன் கோபத்தை வெளிக்காட்டுகிறாள்.நல்ல வேளை வீட்டில் யாருமில்லை.

“இன்னிக்குவரை வீடு அமைதியா இருந்தது.இப்போ அந்தக் கிழவி வாறா.இன்னும் என்ன கூத்தாகுமோ தெரியல.இந்தப் பய கல்லப் போட்டதுதாங் போட்டானே ஒரே போடா போட்டுருக்கக் கூடாது!சனியன் ஒரே அடியா ஒழிஞ்சி தொலஞ்சிருக்குமில்ல.பயந்தாங்கொள்ளிப் பாவிப்பய.இவங் எல்லாம் ஒரு ஆம்பளயின்னு அலையிறானே.ஏங் உசுர எடுக்குறதுக்குன்னு வாறா பாரு சண்டாளக் கிழவி”எனத் தனக்குள்ளேயே பேசி தனக்குத்தானே அலுத்துக்கொள்கிறாள் கமலா!

வாசலில் வாடகைக் கார் வந்து நின்றது.கார் கதவைத்திறந்து கமலாவின் அப்பா முதலில் இறங்கி,’அம்மா மெதுவா மொள்ளமா இறங்கும்மா!ஏண்டி நீதாங் கொஞ்சம் உதவி செய்யெங்”என கமலாவின் அப்பா சொன்னதும் “சரிங்க!அத்த வாங்க மெதுவா கால வச்சு மெல்ல இறங்க்குக்ங்க”எனக்கூறிகொண்டே ஆச்சியை கீழே இறக்க முயற்சிக்கிறாள் கமாலாவின் தாயார்.

“விடுடி என்ன என்னய என்ன காலில்லாத முடமுன்னு நினச்சியா?ன்னு சக்குன்னு குதித்தாள் கிழவி.அவ்வளவுதான்  அய்யோ அம்மான்னு அப்படியே காலைப் பிடித்துக்கொண்டு வலியால் கதறினாள் ஆச்சி.

“ஏம்மா உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?அவதாங் உன்னய இறக்கிவிடுவால்ல அதுக்குள்ள உனக்கு என்ன வீம்பு?பழைய படியும் கால ஒடச்சிக்கப்போரியா?வயசுதாங் ஆச்சே ஒழியே கொஞ்சங்கூடப் புத்தியே இல்ல....புடிறின்னு மனவியின் உதவியோடு ஆச்சியை மெதுவாக கைத்தாங்கலாக வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டு போவதற்குமுன்”ஏம்மா கமலா ஆச்சிக்கு ஆராத்தி எடுத்து சூடம் கொளுத்தி சுத்திப்போட்டு அந்தத் தட்ல உள்ள தண்ணிய தெருவுல கொட்டும்மா”எனக் கூறியவுடன் கமலா முணங்கிக்கொண்டே “சரிப்பா” சூடம் கொளுத்தி ஆராத்தி எடுத்து தட்டுத்தண்ணீரை தெருவில் கொட்டினாள்.ஆச்சியை மெதுவாக அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிப் போய் அப்படியே கட்டிலில் உட்கார வைத்தனர்.

“ஏங் கெழவி உனக்கென்ன இன்னும் கொமறின்னு நெனப்போ!உனக்கு இன்னும் அந்த லொள்ளு போகலயே!இவா பெரிய வீராங்கன வீரலட்சுமி!வீரத்த காட்டுரீகளோ!கெழவி!”என ஆச்சியை கிண்டல் செய்தாள் கமலா.

“ஏண்டி சொல்லமாட்ட சின்னச்சிறிக்கி!எல்லாம் ஒன்னால வந்த வெனதாண்டி!நீ பேசாதடி!”என பாட்டி பழயதைக்க்கிளரினாள்.

“அய்யய்யோ வந்ததும் ஆரம்பிச்சிட்டியா!ஏம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?
என கமலாவின் அப்பா தன் தாயாரை பழைய நினைவில் இருந்து பேச்சை மாற்ற அணை போட்டார்.

“கெழவிக்கு இன்னும் அந்தத் திமிறு போயிருக்கா பாரு கூனி! என கமலா தன் மனதில் எண்ணி வசை பாடினாள்.

“சரி சரி........கமலா ஆச்சிக்கு ஏதாவது குடிக்கக் குடும்மா!’’............அப்பா சொன்னதும் “ஹூம் .......”கமலா வெடுக்கென முகத்த ஒரு சுண்டு சுண்டி விறைப்பாக உள்ளே போனாள்.இதை ஆச்சி கவனிக்கிறாள் “ஹாங்............. அடியே!நீ என்ன நெனக்கிரேன்னு எனக்குத் தெரியுண்டி இந்தக் கெழவி சாகாம திரும்பி வந்துட்டாளேன்னுதான நெனக்கிற”..................ன்னு ஆச்சி தன் மனதுக்குள் பேசுகிறாள்.

அதற்குள் ஆச்சி வீட்டுக்குத் திரும்பி வந்த விஷயம் ஊருக்குத் தெரிய வருகிறது.ஒவ்வொருவராக உறவினர்கள் நலம் விசாரிப்பதற்காக வரத்தொடங்கி விட்டனர்.இதுதான் கிராமத்து மனம்.ஊரில் ஒருவீட்டில் நல்லது பொல்லது எது நடந்தாலும் வாழ்த்தவோ அல்லது ஆறுதல் கூறித் தேற்றவோ ஊரே ஒன்று கூடி வந்துவிடும்.ஆனால் நகரத்து நாகரிகம் வித்தியாசமானது.பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள்.ஒருவருக்கொருவர் பெயர் கூடத் தெரிந்துகொள்ள முயல மாட்டார்கள். கிராமம் என்பது ஒரு குடும்பம் போன்றது.ஆனால் நகரம்.அனைவருமே அனாதைகளாகவே வாழ்கிறார்கள்.அதனால்தான் பட்டப்பகலில் கூட தெருமேல் இருக்கும் வீட்டில் கூட திருடு பயம் இல்லாமல்.நடை பெறுகிறது,அடுத்தவர் வீட்டை எவரோ ஒருவர் புல்டோசர் வைத்து இடித்தால் கூட என்னென்று கேட்க மாட்டார்கள்.தெரிந்துகொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள்.நகர வாழ்க்கை என்பது தனித் தனிக் குடும்ப வாழ்க்கை.ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்வார்கள்.ஆனால் கிராமம் ஒரு கூட்டுக்குடும்பம்போல் கூட்டுவாழ்க்கை வாழ்கிறார்கள்.இங்கு நிசமான மனித வாழ்க்கை.

ஆச்சியை நலம் விசாரிக்க கிராம சொந்தம் பந்தங்கள்.அக்கம் பக்கம் அறிந்தவர் தெரிந்தவர் வேண்டியவர் வேண்டாதவர் வரவும் போகவுமாக இருந்தார்கள்.வெறிச்சோடிக்கிடந்த வீடு ஒரே திருவிழாக்கோலமாக இருந்தது.அப்போது ராஜாவின் அம்மாவும் வாசலில் வந்து உள்ளே வராமல் தயங்கித் தயங்கி ஆச்சியை கவலை தோய்ந்த குற்ற உணர்வோடு வாடிய முகத்தோடு நின்றாள்.ஆச்சி அவளைக்கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் கமாலாவின் அப்பா பார்த்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ,”ஏம்மா வெளியில நிக்கிற உள்ள வாம்மா!நீ என்ன செய்வ பாவம்.”எனக் கனிவோடு கூறினார்.ஆனால் ஆச்சியின் பார்வையில் நடந்ததை மறந்ததாகவோ அவள் தன் தவறை உணர்ந்ததாகவோ இல்லை.அவள் பார்வையில் வெறுப்புதான் தெரிந்தது.அதனால் ராஜாவின் தாயாரின் கால்கள் உள்ளே நுழையத் துணியவில்லை.

“பரவாயில்லை அண்ணாச்சி!அதாங் ஆச்சியைப் பாதுட்டேங்ல்ல.நாங் வாரேங் அண்ணாச்சி எனக்கூறி தன் இரு கைகள் கூப்பி வணங்கி தன் கண்களைத் தன் முந்தானையால் துடைத்துக்கொண்டு தலைதாழ்ந்து நகர்ந்தாள்.அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளே நுழைகிறார்.



(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.








Monday, 27 January 2025

கரிசல் காவியம்11

கரிசல் மண்ணில் ஒரு. காவியம்.11
பாரதியின் பெண்ணுரிமை.

அத்தியாயம் 11

கமாலாவின் வீட்டு ஆட்கள் எல்லோரும் மருத்துவ மனையில்தான் இருந்தார்கள்.கமாலா தன்னந்தனியேதான் வீட்டில் இருந்தாள்.இந்தத் தனிமைதான் அவளைப் பாடாய்ப்படுத்தியது.அவளுக்குள் எந்த அளவிற்கு அச்சம் நிறைந்திருந்ததோ அந்த அளவிற்கு அவளுக்குள் குற்றஉணர்வும் அவளைக் கொடுமைப்படுத்தியது.

ஆச்சி சொன்னபடி ராஜாவைக் கூப்பிட்டு அவனிடம் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள் என்பதை எடுத்துச்சொல்லி
அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தால் அவனும் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் தானும் சூதனமாகப் பார்த்து நடந்திருப்பான்.எனப் பலவிதமாக தனக்குள்ளே ஏதேதோ எண்ணி விடை தேடிக் கொண்டிருந்தாள்.

இனி அவனோடு பேச முயன்றால் அது இன்னொரு பிரச்சனையை உருவாக்கிவிடும்.இரண்டு குடும்பங்களுக்கும்  இடையே வெறும் வாய்ச்சண்டை ந்டந்திருந்தால்கூட ஓரளவுக்கு நிலைமை மாறி சமாதானம் ஏற்படவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.ஆனால் நிலைமை அப்படியில்லை அடிதடி வீண் வாய்ப் பேச்சு என சண்டை உச்ச கட்டத்தைத் தொட்டுவிட்டது.
எனவே இனி என்ன மேற்கொண்டும் விளையுமோ! எதிர் கால உறவு எப்படி அமையுமோ! என கமலா நேர் எதிர் விளைவுகளை பற்றி மிகவும் விலாசமாகவே சிந்தித்தாள்.

இந்த நிலையில் அவள் இன்னொன்றையும் யோசிக்காமலில்லை.சம வயதுள்ள ஆணும் ஆணும் பழகினாலும் பெண்ணும் பெண்ணும் பழகினாலும் சமுதாயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் போது ஆணும் பெண்ணும் பழகினால் மட்டும் சமுதாயம் ஏன் ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறது?சமுதாயத்தைப் பார்த்துத் தனக்குள்ளே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

யாருடைய கேள்விதான் இச்சமுதாயத்தை இன்றைய அவசரத்திற்கு மாற்றி விடும்?.பெண் விடுதலைப் பற்றிப் பேச இனி எத்தனை பாரதியும் பெரியாரும் பிறந்து வர வேண்டியிருக்குமோ தெரியவில்லையே!பாவிகள் என்னைப் படிக்கவிடாமல் பூட்டி வைத்து விட்டனர்.என் வளர்சியிலும் வாழ்க்கையிலும் என்னை ஏன் சுயமாகச் சிந்திக்கத் தடை போடுகிறார்கள்.
என்னுடைய எதிர்காலம் பற்றி மற்றவர்கள் முடிவு எடுப்பதில் நிசமாகவே என்ன நன்மை ஏற்பட்டுவிடும்?
அது எந்தவிதத்தில் நியாயமுமாகும்?அவரவர் வாழ்வை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.
அதுதான் சரியாகவும் இருக்கும்.

ஏனிந்த ஆச்சி இப்படி யோசிக்கிறாள்.அம்மாவும் அப்பாவும் கூட ஓரளவுக்கு படித்தவர்கள்.அவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.
ஆனால் இந்த ஆச்சிதான் பழைய பஞ்சாங்கம்.குடும்பம் வீடு என்ற எல்லைகளைக் கடந்து யதார்த்தங்களை பார்க்க பயந்துகொண்டு அவள் இன்னமும் பழமைக்குள் ஒளிந்துகொண்டு வெளியில் வரமறுக்கிறாள்.

யாருக்காகவும் நான் ஏன் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்துப் போக
வேண்டும்.எனக்கென எனக்குள்ள உரிமைகள் காத்திருப்பதை நான் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்?என நியாயங்களை தனக்குள்ளே நீதிமன்றம் அமைத்துத் தானே வழக்காடுகிறாள்.

அப்போது மேலைக்காற்று சுழட்டி அடிக்கிறது. அலமாரியிலிருந்து ஒரு புத்தகம் படபடத்துக்கொண்டு பறந்துவந்து சில பக்கங்களை விரித்து ஏதோவொரு பக்கத்தை தேர்வுசெய்து விரிப்பதுபோல் விரிக்கின்றது.அதில் பாரதியின் வரிகள் காற்றின் வலிமைக்கு ஈடு கொடுத்து என்னைப் படித்து எழுச்சி பெறுக!மடமை விட்டுக் கடமை உணர்ந்து வெளியே வா!உனக்கான உரிமைகளைத் தட்டிப்பறிக்கப் பிறந்தவர் எவரும்இல்லை.நீ உன்னை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளவேண்டாம்.

உன்னைத்தான் நான் தேடுகிறேன்.நான் பாடும் புதுமைப்பெண் நீதான்.இதோ என்னை விரி!படி என்பதுபோல் கமலாவின்முன் தன்னை படித்துக்காட்ட புதுமைப் பெண்எனும் பெண்மையாம் கண்ணகியின் வீர உணர்வைத் தட்டி எழுப்பும் வண்ணம் அவனுக்குள் அன்று கனன்ற அந்த விடுதலை உணர்வின் வேகப் பாய்ச்சலில் துடித்துவந்த துள்ளும் உணர்வுள்ள துடிக்கும் வரிகளைப் பளிச்சென அவள் கண்கள் கொத்திக்கொள்ளும் விதத்தில் விரித்துக் காட்டினான் காற்றிலே விசையாகி பறந்துவந்த பாரதி.

வரிகளின் விலாசமே அவளைக் காந்தம்போல் கவர்ந்து ஈர்த்தன.தன் கண்களை அகலவிரித்து அள்ளிப்பருக அனுமதித்தாள்.பாரதியே பாவையாகி கமலாவுக்குள் வந்து புகுந்து கொண்டவனாய் கமலாவை தன் கவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டான் மகா கவி பாரதி.

'"புதுமைப் பெண்
மாதர்க்குண்டு சுதந்திரம் என்றுநின்அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் 
திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம்.        
அறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல்பெண்ணற
மாகுமாம் உரைப்பது கேட்டிரோ!

இவ்வரிகள் அவளை விட்டு விடுதலையாகு எனத்
தூண்டும் ஒளியாய் பிரகாசித்தது.அவளுக்குள் ஒரு
புத்துணர்வு எழுந்து அவளை உசுப்பியது,

(தொடரும்}'


கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 15 January 2025

கரிசல் காவியம் 6

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.

அத்தியாயம் 6

ஆச்சிக்கு எங்கள் நட்பின் மீது ஒரு விதமான பயம் கலந்த சந்தேகம் உருவாகத் தொடங்கி விட்டது.ஆரம்பத்தில் எங்களுக்குள் இருந்தது நட்பா காதலா என எங்களுக்கு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்கக் கூடிய அளவிற்கு அறிவு முதிற்ச்சி இல்லை.எங்கள் இருவரின் உறவினர்களின் வீணான சந்தேகக் கட்டுப்பாடு கெடுபிடிகளால்தான் எங்களுடைய உறவில் என்ன இருந்தது.எது இல்லாதிருந்தது என்பதை எங்களை யோசிக்க வைத்தது.அந்தத் தேடல்தான் நட்பைத் தாண்டி காதல் எனும் இன்னும் ஆழமான புனிதமான உயிரில் கலந்த சொந்தமாக உணரச்செய்தது.

இதில் கமலாவின் குடும்பம்தான் அதிகமான எதிர்ப்பைக் காட்டியது.கமலா ஒரு பெண் எனும் பயம் மட்டும் அவர்களிடம் மேலோங்கி இருந்திருக்குமானால் அது ஒரு இயல்பான அச்சம் அல்லது அக்கறை எனச்சொல்லலாம்.ஆனால் அந்தக் காரணம் இரண்டாம் பட்சம்தான்.அவர்கள் முதன்மையாக எடை போட்டுப்பார்த்தது என்னுடைய சாதியையும் பொருளாதாரச் சூழலையும்தான்.எல்லாவகையிலும் நான் அந்தக் குடும்பத்தைவிடத் தாழ்ந்தவன் என்பதுதான் கமலாவின் குடும்பத்தாரிடம் அதிகமான கவலையாக இருந்தது.இந்த வித்தியாசம் ஒரு வேளை சமரசம் ஆகி இருக்குமானால் அன்று எங்கள் நெருக்கத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது என்பதே என் நம்பிக்கை.

ஆகவே எங்களின் கள்ளமில்லா அன்பை அது பிஞ்சாக இருக்கும் போதே நறுக்கி விடவேண்டும் என அவள் வீட்டில் ஆச்சியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கூடி ஒரு முடிவை எட்டியது.அதாவது ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து என் குடும்பத்தை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டைகள் உருவாக்கத் திட்டம் தீட்டினர்.

எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு ஆடுகளும் நான்கு கோழிகளும் வளர்த்தோம்.கிராமத்தில் ஏழைகளின் அவசரப் பொருளாதார உதவிகளுக்கு இந்த ஜீவன்கள்தான் உதவும்.எங்கள் ஆடுகள் அவள் வீட்டின் சவர் ஓரமாகத்தான் படுத்துக் கிடக்கும்.கோழிகளும் அவள் வீட்டு முற்றத்தில்தான் அடிக்கடி போய் அங்கு சிந்திக்கிடக்கும் அரிசி பயறுகளை கொத்தித்தின்னும்.அந்தப் பொல்லாக்கிழவி இதைச்சரியான சாக்காகக் கண்டறிந்து என் அம்மாவோடு சண்டை இழுத்தாள்.

‘அடியே முத்தம்மா ஓங் ஆடு ரெண்டும் ஏங் சொவர ஒரசி ஒரசி கரச்சி இடிச்சிரிச்சடி.நீதாங் கண்ட கண்ட பயகளோட சாவகாசம் வச்சிருக்க.ஓங் வீடு இடிஞ்சாலும் அவனுக கட்டிக் குடுப்பானுக.எங்க சொவரு இடிஞ்சா எவண்டி கட்டிக் குடுப்பாங்.வந்த பயலுக்கு கோழி அடிச்சிப்போட ஏங் வீட்ல மேச்சிதாங்
வளக்கனுமாக்கும்” என என் தாயாரின் நடத்தையை களங்கப்படுத்தும் நோக்கில் கிழவியின் சண்டை என்னைக் குறி வைத்துத்தான் அவள் வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

காரணம் அந்த சண்டைக்குள் என்னை இழுக்கவேண்டும் என்பதற்காகவே என் தாயாரின் நடத்தையை உண்மைக்கு மாறாக இழித்துப் பேசினாள்.பொதுவாக கிராமங்களில் சண்டை என்றாலே கணவனை இழந்த பெண்களை மிகவும் மட்டமாக வாய்கூசாமல் கேவலப்படுத்திப் பேசுவதுதான் இன்றும் வழக்கமாக இருக்கிறது.ஒரு பெண் அவள் தன் கணவனை இளம் வயதில் இழந்து விட்டால் அது ஒரு சாபக்கேடுதான்.பாவம் என் அம்மா.அப்படியே கூனிக்குறுகி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.அதைப்பார்த்து என் மனம் பொறுக்கவில்லை.

வேறு வழியில்லை.நானும் களத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.தாயைப்ப் பழித்துப் பேசும் போது யார்தான் பொறுத்துக்கொள்ள முடியும்.நானும் நேற்றுவரை ஆச்சி என்று அழைத்த மரியாதையான சொல்லை  கொஞ்சம் மாற்றிப் பேசவைத்து விட்டாளே அந்தக் கூறு கெட்டக் கிழவி என எண்ணும்போது என் மனம் வேதனைப்படுகிறது.

ஆமாம் நானும் என் உச்சமான கோபத்தில் சொற்களைக் கொட்டிவிட்டேன்.
“ஏய் கிழவி!வார்த்தையைக் கொஞ்சம் அளந்து பேசு.உனக்குத்தான் பேசத் தெரியுமுன்னு பேசாத.அப்புறம் நாங் பேச ஆரம்பிச்சா ரொம்ப அசிங்கமாப் போயிரும்.நீ பெரிய மனுசி பேசிட்டே .ஆனால் நாங் சின்னப்பய.நாங் பேசிட்டா ரொம்ப மானக்கேடா ஆயிரும்” என தொடக்கத்தில் வார்த்தைகளைப்  பக்குவமாகத்தான் பேசினேன்.ஆனால் கிழவியின் வேகம் கொஞ்சமும் குறையவே இல்லை.அவள் ஒரு முடிவோடுதான் சண்டையைத் துவக்கி இருக்கிறாள்.ஆகவே அவள் தொட நினைக்கும் உச்சத்தைத் தொடாமல் விடுவதாகத் தெரியவில்லை.

ஏண்டா உங்க ஆத்தா ரொம்ப யோக்யமோடா!ஆத்தாளப் பேசுன ஒடன கோபம் பொத்துக்கிட்டு வருதோ!வயசான கெழவனுக்கு வாக்கப்பட்டு அவங் எப்பச்சாவான்னு காத்திருந்தா.அவங் எங்கடா செத்தாங் இவதானடா அவனக் கொன்னா.இப்போ இளவட்டப் பயகளாப் பாத்துப் பாத்துப் புடிக்கிறா.எவங் வாராங் எவங் போறான்னு எல்லாக் கூத்தையும் நாங்களும் பாத்துக்கிட்டுத்தான இருக்கோம்.இந்தத் தேவடியா பொலப்புத் தெரியாதாக்கும்.”என மீண்டும் கொடுமையான கடுஞ் சுடு சொற்களை அள்ளி இறைத்தாள்.
     
என் பொறுமை என்னையும் மீறி அறிவை இழந்தது.ஆத்திரம் யோசிக்க மறந்தது.நான் என்ன செய்ய முயல்கிறேன் என்பது எனக்கேவிளங்கவில்லை.
கோபக் கொதிப்பில் குணம் மாறியது.புத்தி கெட்டு கோட்டியன் போல் வெறி உச்சி முட்டியது.விஷம் ஆனது என் வெகுளித்தனம்.என்னைக் கட்டுப்படுத்த இயலாத எனக்குள் ஒரு மிருகத்தனம்.சிந்தை தொலைத்தேன்.அப்போது என்ன நடந்தது என்று இப்போது நினைத்தாலும் புரியாத புதிராகவே உள்ளது.

அய்யய்யோ அளவிட முடியாத அப்படியொரு வேகம்! அவ்வளவு பெரிய கல்லை நான் எப்படித்தான் ஒரு அட்டைக்ககல்லை தூக்குவதுபோல் அலக்காகத் தூக்கிநேனோ தெரியவில்லை.ஆச்சரியமான விளைவுதான் அது.யாரும் எதிர் பார்க்காத துயரம்.அப்படியே அந்தக் கல்லை கிழவியின் மீது ஒரே போடாகப் போட்டுவிட்டேன்.

“அட சண்டாளா!என்னையக் கொன்னுட்டயே”ன்னு பாவம்! கிழவி  தரையில் சாய்ந்தாள்`

(தொடரும்)


அடுத்த தொடர் 25/1/2014

Saturday, 11 January 2025

பொறுமையுடன் வாழ்க!

பொறுமையுடன் வாழ்க

பிழைக்கத் தானே  உலகம்.
உழைக்கத் தானே  உடலும்.
கவலைக் கென்ன தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!

தன்பலம் எழுப்பிடு.
பின்புலம் மறந்திடு.
வெறும் பேச்சு விலக்கிடு.
பொறுப்பாச்சு புறப்படு.

வரவினை நினைவிடு.
செலவினைக் கணக்கிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.

திட்டமாய் அடியெடு.
எட்டுவதைக் குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.

நிலையினை உணர்ந்திடு
விலையினை தேர்ந்திடு
கடன்படா உரம் நடு
உடன்படு வரம்பொடு.

பெருமைக்கு மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.

கவிஞர்.கொ.பெ.பிச்சை யா.

Thursday, 9 January 2025

கரிசல் காவியம் 3

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம் 3
வாசலைத் தாண்டி நான் உள்ளே செல்ல எனக்குள் துணிவு இல்லை.ஏன் அந்த அச்சம். அது எனக்கு விளங்கவில்லை ஆனாலும் அவளுடைய புதிய தோற்றம் அவள் முன் என்னை அவளைவிடச் சின்னவனாக குறுக்கிவிட்டது.அவளிடம் அந்தக் குறும்புத்தனம் மறைந்திருந்தது.அவள் முகமே புதுப்பொலிவாய் சொலித்தது.என்னிலும் வயது கூடிப் பெரியவளாகத் தோன்றினாள்.பாவாடை சட்டை மாறி கூடுதலாகத் தாவணி அவள் பருவ மாற்றத்தை விலாசம் காட்டியது.ஏனோ தெரியவில்லை அவளை போடி வாடி என அழைக்க மனம் துணியவில்லை.என்னை அறியாமலே அவள் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது.அவள் பெரிய மனிசி ஆகிவிட்டாள் வயதுக்கு வந்துவிட்டாள் என்ற சொற்களுக்கான விளக்கம் இப்போது எனக்குப் புரிகிறது.

.அப்போது எனக்கு வயது பதினான்கு.அவளுக்கும் அதே வயதுதான் ஆனாலும் அவளுக்குள் தெளிந்த அந்த முதிற்சி எனக்குள் வளற்சி இல்லை.அதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தலைமுறை இடைவெளி.ஆணைவிட பெண்ணுக்கு அனுபவ ஞானம் வேகமாக வளர்கிறது என்பதும் அறிவியல் உண்மை.அதனால்தான் ஆணைவிட பெண்ணுக்கு திருமண வயது குறைவாக இருக்கவேண்டும் என அக்காலப் பெரியவர்கள் கண்டறிந்து சொன்னார்கள்.குறைந்த பட்சம் பெண்ணைவிட ஆணுக்கு ஐந்து முதல் பத்து வயது அதிகம் இருந்தால்தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் அனுபவ ஞானம் சமநிலை ஆகும் என்பது பழமை கணித்த கணக்கு.ஆணைவிட பெண்ணுக்கு வயது இடைவெளி அதிகமான நிலையில் அவர்களுக்குள் புரிதல் இடைவெளி அதிகரிக்கும்.இதைதான் ஆங்கிலத்தில் ஈகோ என்று சொல்வார்கள். அப்படியான நிலையில்தான் குடும்பத்தில் சில சமயங்களில் பிரச்சனைகள்,குழப்பங்கள்.ஏற்படும்பொழுது அவர்களால் அதைச் சமாளித்துச் சரிக்கட்டி அனுசரித்து இணைந்து வாழ முடியாமல் பிரிய வேண்டிய கட்டாய சூழலுக்குள் அநேக தாம்பத்ய உறவுகள் தள்ளப்படுகின்றன.
எங்களுக்குள் நீண்ட நேர விவாதம் இப்படித்தான் நீண்டன.
 
ஏய் உள்ள வாலே.....ஆச்சி வந்தால் என்ன சொல்வாள்.......அவட்ட நாங் சமாளிச்சுக்கிறேன்........`நீ வாலேஅவள் துணிச்சலாக என் கையைப்பிடித்து இழுக்கிறாள்.ஆனால் நான் பயத்தில் அவள் கையைத் தட்டுகிறேன்.

ஏல ஒன்னுமில்லல........எங்க வீட்ல நேத்து பணியாரம் செஞ்சாங்க........ரெண்டத் தாரேன் சாப்பிட்டுப் போலமீண்டும் என் கையைப்பிடித்து உள்ளே இழுக்கிறாள்.
வேண்டாம்..........நாங் இங்கேயே நிக்கிறேன்..........நீ போயி எடுத்துட்டு வா..........ஆச்சி பாத்தா..வையும்..........எனக்குப் பயமா இருக்கு.........என்ன விடு எனப் பதறிய மொழியில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுகிறேன்.
 
சரி இவங் வேலைக்கு ஆகமாட்டான்என எண்ணி அவளே அலுத்துக்கொண்டாளோ என்னவோ,விடுவிடுன்னு வீட்டுக்குக்குள்ளே போனாள்.ரெண்டு பணியாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்`”இந்தா......போல....பயந்தான்கொள்ளிப் பயல..நீ..உன்ன என்ன நாங்......அவிச்சா தின்னுடப் போறேன்.....பேசி ரொம்ப நாளாச்சே ..பேசலாமுன்னுதான கூப்பிட்டேங்.......இப்படிப்பயந்து சாவுரஎன சலித்துக்கொண்டே அவளும் வெளியே வந்து அந்த முருங்கை மரத்தைக் கட்டிப்பிடித்துச் சுற்றினாள்.

நாங் பனியாரத்தை தின்னாமல் கையில் வைத்துப்பார்த்துக் கொண்டே நின்றேன்.என்னைக்கவனித்த அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை.கலகலவெனச்சிரித்தாள்.
ஆமா..ஏஞ் சிரிக்கிற.....உனக்கு கொஞ்சங்கூட பயமே இல்லயாநானும் பேச ஆரம்பிச்சேன்.
அட போடா களிமண்ணு.....ஆமா என்னல பயம் உனக்கு,.......ஏண்டா இப்படி ஆயிட்ட......என்னல ஆச்சு உனக்கு.என என்னை ஏளனம் செய்து மீண்டும் சிரித்தாள்.
 
வேறொன்னுமில்ல உங்க ஆச்சியக் கண்டாத்தாங் எனக்குப் பயமா இருக்கு....கமலா பெரிய மனிசி ஆயிட்டா ..அவட்ட இன்னுமே நீ பேசக்கூடாதுன்னு எங்க அம்மாவும் சொல்லிட்டா ..அதான்.............

அதாங் பயந்துட்டயாக்கும்....அடப்போடா முட்டாள்....பெரியவங்க இருக்கும் போது அப்படி இருந்துக்க வேண்டியதுதாங் ....அவங்க இல்லாத போது இப்படி நாம பேசிக்க வேண்டியதுதாங்.எனப் பெண்ணுக்கே உரிய புத்திசாலித்தனமாகவும் பேசினாள்.அப்போது அவள் அறிவை வியந்து பாராட்டும் பக்குவம் இல்லை.அதை இப்போது எண்ணும் போது எனக்குப் பொறாமையாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.என்ன இருந்தாலும் சமயோசிதப் புத்தி என்பது பெண்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்.அதனால்தான் பெண்ணுக்குப் பின் புத்தி என்பார்கள்.ஆமாம் அவள் பின்னும் பின்னும் என அவள் புத்தி விரிந்து கொண்டே பெருகும்.அதனால் பெண்கள் அவ்வளவு எளதில் ஏமாந்துவிடமாட்டர்ர்கள்.

விடுதலையான கூண்டுக்கிளிபோல் என்னையே மகிழ்ச்சியில் பார்க்கிறாள்.நேரிலே பூக்கும் மல்லிகைபூவாய் சிரிக்கிறாள்.ஆனந்தக்களிப்பில் அந்த முருங்கை மரத்தைப் பாடாய் படுத்துகிறாள்.என்ன செய்வது அவள் புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லையே.அவள் வயதுக்கு வந்து விட்டாள்.நான் அப்போது இப்போது போல் விவரமாக இல்லையே.இப்போது அந்நிகழ்வை நினைக்க நினைக்க எனக்கே கேவலமாக இருக்கிறது.கள்ளமில்லா அந்தப்பிள்ளைப் பருவத்தை எண்ணிப்பார்க்கும் போது பெருமையாகவும் இருக்கிறது.இறைவன் செய்யும் விந்தை அது.வளரும் பருவத்தில் அதை ஒளித்து வைத்து வாழும் பருவத்தில் அள்ளித்தருகிறான்.இறைவன் எவ்வளவு பொறுப்பானவன் பார்த்தீர்களா?எதை எதை எந்த எந்த பருவத்தில் மறைக்க வேண்டுமோ அதை அதை அந்த அந்த பருவத்தில் மறைத்தும் உணர்த்தியும் விந்தை செய்யும் அவன் சிறப்பே சிறப்பு.

அந்த முருங்கை மரத்தை அவள் சுற்றி சுற்றி ஆடுகிறாள்.நான் எட்டிநின்றுதான் வேடிக்கை பார்க்கிறேன்.

கொ.பெ.பி.அய்யா


.(தொடரும்)