கரிசல் மண்ணில் ஒரு
காவியம் 9
அத்தியாயம்-9
பெண் விடுதலை
கிழவி மருத்துவ
மனையில் கிடந்தாலும் அவள் விதைத்த கன்னி வெடிகள் ராஜாவை கமலாவின் வீட்டை நெருங்க
முடியாமல் அச்சுறுத்தியது.ஒட்ட முடியாத அளவில் அந்த இரு வீட்டின் பழக்க வழக்கம்
வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கமலா ராஜாவுக்காக ஒரு பாட்டுப் பாடுவாளே அந்தப்
பாட்டு ஒலி கேட்டுப் பல நாட்களாகின.
கமலாவின் பாட்டு ஒலி
வெளிவரும் அந்த சன்னல் கதவுகள்மூடப்பட்டிருந்தன.
முன் வாசல்க் கதவும் சாத்தப்பட்டிருந்தது.கமலாவின் ஒரு மெல்லிய குரல் ஒலி கூட வீட்டைவிட்டு
வெளியில் கசியவில்லை.ராஜா பித்துப் பிடித்தவன் போல் சன்னல்க் கதவு திறக்காதா
எனக்காத் திருந்தான்.
வீட்டைச் சுற்றி அமைதியான சூழல் நிலவியது.இந்த உலகமே
சூன்யமாகிவிட்டதோ என்ற பயம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
அப்போதுகூட கமலாவின்
நிலை என்னவோ என்பதே அவன் கவலையாக இருந்தது.அவன் கவலை சரியாகத்தான்
இருந்தது.கமலாவுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள்.அவள் எந்த ஒரு காரணம் தேடியும் ராஜாவைப்
பார்க்கவோ பேசவோ கூடாது என்பது கண்டிப்பான தடை உத்தரவு.அப்படி மீறும்போது அவள்
அவளுடைய தாய்மாமன் வீட்டிற்கு அனுப்பபடுவாள் எனவும் அவளை மிரட்டி
வைத்தனர்.தாய்மாமன்தான் அவளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை.அதற்காகவே அவளை
பொத்திப் பொத்தி அவளுடைய ஆசைகளையும் கனவுகளையும் அர்த்தமில்லாமல் அடக்கிச் சிதைத்து வைத்தனர்.இது
மனித இனதிற்குச் செய்யும் அநியாயம், அக்கிரமம், பாவம் என்றுதான் நாம் நொந்து
கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பதுதான் வேதனையில் வேதனை.பெண்விடுதலை பற்றிப் பேசியும் போராடியும் வந்த பாரதியும்
பெரியாரும் தோற்றார்களா வென்றார்களா நிச்சயமாகக் கூறத் தெரிய வில்லை.ஆம்
இதோ அந்த சுயமரியாதைப் பகலவன் சொன்னதை அப்படியே இங்கே துணிச்சலாகச்
சொல்கிறேன்.கேளுங்கள்.” பெண்கள் விடுதலை பெறுவதற்கு
இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனெனில்,
இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள்
என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை
ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக்
கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண்
வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியா தென்று கருதி ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். அப்படி அவர்கள்
கருதுவதற்கு என்ன காரணம் என்று நாம் ஆராய்வோமே யானால் பெண்கள் வெறும் பிள்ளை பெறும் எந்திரமாகக் கருதப் படும் இயற்கைத் தொல்லை ஒன்று இருப்பதால் தான் என்னவோ தாங்கள் ஆண்துணை இல்லாமல் வாழ முடியும் என்பதற்கு எதிராக தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளைப் பெறும் இயற்கைக் கட்டாயத்தால் தங்களுக்கு ஆண் துணை அவசியம் இருப்பதால் ஆண்கள் ஆதிக்கம்
ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் இயற்கையின் ஏற்பாட்டை எவர் என்ன செய்ய இயலும்.அதற்காக இயற்கை ஏற்பாட்டுக்கு மாறாக எதைச் செய்தாலும் இயற்கையின் இயல்பு நிலைக்கு எதிர்வினை ஆற்றுவது விபரீத விளைவாகி விடும். என்றே ஐயப்படலாம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக்
காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனம் என்பதாகச் சமூகம் வசை பாடும் . உலகம் இதை
இயற்கைக்கு விரோதம் என்று சொல்லி வன்மையாக கண்டிக்கும். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள்,
மற்றும் ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை உடன் இணைந்து வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில்
மாத்திரம் இயற்கைக்கு விரோதமாக எதைச் சாதித்துவிடக் கூடும்? அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில்
ஒன்றும் முழுகிப் போய்விடாது என்பது அருவருப்பாகும்.
அது தவிர,
'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது.
மானுடம் வர்க்கம் அழிந்தும் போகும்.அப்புறம் ஆண் பெண் படைப்பின் அவசியம் என்ன?
எனவே இப்படியெல்லாம் யோசிப்பதை பெண்குலமே ஏற்றுக்கொள்ளாது. என்னதான் விஞ்ஞானம் பல விந்தைகள் படைத்து இருந்தாலும் இப்படி ஒரு கருத்து அபத்தமான அஞ்ஞானமாகும் என அஞ்சி விலகிப் போகிறது.
பெண்ணடிமைத் தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும்
பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த
இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்வதில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலைக் கொண்டு பேசுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு
எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக்
கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு
எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும்
தெரிவித்துக் கொள்ளு கின்றோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக்காரனா யிருப்பத னாலேயே
யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க
வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும்
அதிகப்படவும் நேரிடுகின்றது.
பெண்களின் முழுமையான
விடுதலைக்குப் பெண்களே தனக்குள்ள சக்தியை உணர வேண்டும்.போராடத் துணிந்து ஒன்று கூட
வேண்டும்.ஒரே குரலில் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும்.அப்போதவர்கள்
பாரதியையும் பெரியாரையும் தங்களுக்குள் உயிர்த் துடிப்பாக உள் வாங்கிக்கொண்டு தாமே
முன்னேற வேண்டும்,
(தொடரும்)
கொ.பெ..பி.அய்யா.ரர
ஈ

No comments:
Post a Comment